படும் பல பெயர்களை ஆராய்ச்சி செய்வதால் தமிழர் வானாராய்ச்சியில் சிறந்து விளங்கினார்கள் என்பது புலனாகும். |
11. சோதிடம் |
"மறைந்த ஒழுக்கத் தோரையு நாளுந், துறந்த வொழுக்கங் கிழவோற்கில்லை, "குடையும் வாளும் நாள் கோள்" என்னும் தொல்காப்பியச் சூத்திரங்கள், "கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென" திங்கள் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து" என வரூஉம் அகப்பாட்டுக்கள் முதலியன தமிழரின் சோதிட உணர்ச்சியை விளக்கும். |
"டாக்டர் தீபா தக்கணத்தில் தமிழ்ப் பாஷை வழங்குமிடத்தில் சௌர அல்லது வாக்கிய சித்தாந்தமே உபயோகப் படுத்தப்படுகின்றதென உவாரன் ஆசிரியர் கூறியுள்ளாரென்றும், அது பிழையற்ற தென்றும் குறித்துள்ளார். மேலும் வேதாங்க சோதிடத்திற் கண்ட சாந்திரமான கணிதம் பிழைபட்டதெனத் திவான் பகதூர் திரு. சாமிக்கண்ணு பிள்ளை அவர்களது 1916 ஆம் வருடத்துச் சர்வ கலா சங்க சோதிடச் சொற்பொழிவுகளை ஊன்றி நோக்கப் புலனாம். தென்னாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவந்தது புலீசனால் இயற்றப்பட்ட வாக்கியகணன முறை." (செந்தமிழ். ** No.5) |
12. போர்க் கருவிகள் முதலியன |
"அரசனுக்கு நால்வகைச் சேனைகளு மிருந்தன. பல படைவீரர் பழகுவதற்காகத் தேரேறுமிடங்களும் குதிரையேறுமிடங்களும் (செண்டுவெளி) வாட்டொழில் செய்யுமிடங்களும், விற்போர் செய்யுமிடங்களு மிருந்தன. வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள். குந்தம், சக்கரம் முதலிய ஆயுதங்களுமிருந்தன. தமது மெய், வாள் முதலிய படைகளால் ஊறுபடாம லிருத்தற்குக் கேடய மென்னும் மெய்க்காப்புக் கருவியும் உபயோகித்தனர். இக்கருவி கரடித்தோலாற் செய்யப்பட்டதென் |