பது தெரிகிறது. புலித்தோலாற் செய்த கவசத்தை வீரர்களணிந்து கொள்வது வழக்கம். வாகனங்களி லேறாத வீரர் கவசம் பூணுதல் மரபன்று. விளையாட்டுகளுள்ளே யானைச் செண்டு குதிரைச் செண்டு என இருவகை யுண்டு. இவை யாடும் முற்றவெளியைச் செண்டுவெளி யென்ப. யானைப் போர் அக்காலத்து மிகச் சிறந்தது போலும். யானைகள் நெருங்கி வந்து போர் செய்யாமலிருத்தற்கு இரும்பால் யானை நெருஞ்சி முள்ளாகச் செய்யப்பட்ட கப்பணமென்னுங் கருவியைச் சிதறுவார்கள். யானை மருப்பை யறுத்துக் கூர்மையிட்டு அது வலிகொள்ளும்படி கிம்புரி யென்னும் பூணிடுவார்கள். நகரின் மதிலைச் சார யானைக் கூட்டங்களிருந்தன. மதிலுக்கு உள்ளேயும் புறத்தேயும் ஆழமான அகழிகள் இருந்தன. புறத்தே அகழியினின்றும் கோயில் அகழிக்கு நீர் வருவதற்காகக் கால்வாய்கள் செய்யப்பட்டிருந்தன. வீதியிற் செல்லும் யானைகள் அதனுள் விழாதிருத்தற் பொருட்டு இது மேலே மூடப்பட்டிருக்கும். இக் கரந்த கற்படை கரந்துபடை யெனவும் கரந்துறை யெனவும் வழங்கும். இம்மதிலிலே பலவகைப் பொறிகளிருந்தன வென்பதும் அவை யவனரால் இயந்திரிக்கப்பட்டன வென்பதும் கூறப்பட்டுள. யுத்தத்துக்குச் செல்வோர் பலவகை மாலை சூடிக்கொள்வது வழக்கமென்பதுமறிகிறோம்." செந்தமிழ்ச் செல்வி) | 1. அரண் | "அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்துக் காவற்காடு புறஞ்சூழ்ந் ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவன ரியற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் மெய்புழை ஞாயிலும், ஏனைய பிறவு மமைந்து, எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிற வெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். | "இனி மலையரணும் நிலவரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில் | | |
|
|