பக்கம் எண் :

178தமிழகம்

போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிற வெந்திரங்கள் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். (நச்சினார்க்கினியர்)

"மறனுடை மறவர்க் கேறவிட னின்றி
நெய்யோ டையவி யப்பியெவ் வாயு
மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக்
கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும்
வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப்
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு
மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் திகழ்ந லம்பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந்
தாக்கருந் தானை யிரும்பொறை
பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே."

(பொன்முடியார்)

     அரண்மனை வாயிலில் பந்து பாவை முதலியன தூக்கப் பட்டிருந்தன. "வரிப்புனை, பந்தொடு பாவை தூங்க" (முருகு) பகை அரசரைப் பெண்களாகப் பாவித்து அவர்கள் விளையாடுதற் கென்றே அவை கட்டப்பட்டன.

2. மதிற் பொறிகள் முதலியன

     வளைவிற் பொறி (இது வளைந்து தானே எய்வது), கருவிர லூகம் (இது குரங்குபோ லிருந்து சேர்ந்தாரைக் கொல்வது), கல்லுமிழ் கவண், கல்லிடு கூடை (இடங்கணி யென்னும் பொறிக்குக் கல்லிட்டுவைக்குங்கூடை), தூண்டில் (இது தூண்டில் வடிவாகச் செய்து, அகழியிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் இழுத்துக்கொள்வது), தொடக்கு (கழுத்திற் பூட்டியிழுக்கும் சங்கிலி), ஆண்டலை