யடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை எடுப்பது), கவை (இது மதிலேறின் மறியத்தள்ளும் ஆயுதம், கழு, புதை (அம்புக்கட்டு) ஐயவித் துலாம் (இது கதவை யணுகாதபடி அம்புகள் வைத்தெய்யும் யந்திரம்), கைபெயர் ஊசி (மதிற் றலையைப் பற்றுவாரைக் கையைப்பொதிர்க்கு மூசி), எறி சிரல், (இது சிச்சிலி வடிவாய்க் கண்ணைக் கொத்து மாயுதம்), பன்றி (இது மதிற் றலையில் ஏறினாருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்தது), பனை (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற் கமைத்த பொறி), எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல், சதக்னி, தள்ளி வெட்டி, களிற்றுப் பொறி, தகர்ப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, அரிநூற் பொறி, ஞாயில் (குருவித்தலை), பிண்டி, பாலம், எழு, மழு, வாள், கவசம், தோமரம், கதை, தண்டம், நாராசம், இரும்பு முள், கழுமுள், கூன்வாள், சிறுவாள், கொடுவாள், அரிவாள், சுழல்படை, ஈர்வாள், உடைவாள், கைவாள், கணையம், கோடாலி, தோட்டி, வேல், வச்சிரம், குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெருஞ்சவளம், சக்கரம், கன்னம், உளி, பாசம், தாமணி, சாலம், ஊசி, முசுண்டி, முசலம், இடங்கணி, அள்பலகை முதலியன. கடலோட்டுக்கதை ஆயுதங்கள் தொண்ணூற்று நாலு என்று சொல்கின்றது. | 13. வீரத்தாயர் | நமக்கு வெறுங் கட்டுக்கதைகள் போலத் தோன்றும் வீரச்செயல்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்களிடத்திற் காண்கின்றோம். தமிழ்த்தாய்மாரே தம் புதல்வரை வீரச் செயல்களில் ஊக்கிவிட்டார்களென விளங்குகின்றது. பொன்முடியாரென்னும் பெண்புலவர் தாய் தந்தை அரசன் மகன் முதலியவர்க்குரிய கடமைகள் இன்னவென்பதை அடியில் வருமாறு கூறுகின்றார்: | ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே | | | |
|
|