பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்183

மரத்தைத் தமதூர்ப் புறத்துச் சோலைகளில் வைத்து வளர்த்து அதனைக் குறிக்கொண்டு காப்பார்கள். படையெடுத்துவரும் பகைவேந்தர்கள் அக் கடிமரத்தையே முதற்கண் தடிய முற்படுவார்கள், அங்ஙனம் அவர்கள் அதனைத் தடிந்துவிடுவார்களானால், அம் மரத்துக்குரிய அரசருக்குப் பெருந்தோல்வியும், பேரவமானமும் எய்திய தாகக் கருதப்படும். பகைவேந்தர்கள் அம் மரத்தில் தம் யானைகளைக் கட்டுதலும், அதனை வெட்டிக்கொண்டுபோய்த் தங்கள் யானைகட்குக் கட்டுத்தறியாக நட்டுவைத்தலும், அம்மரத்தால் தங்களுக்கு வீரமுரசஞ் செய்தலும் மரபு.

15. தமிழ் வேந்தரின் போர் ஒழுக்கம் முதலியன

     தமிழ் மூவேந்தரும் சிற்றரசரும் நெடுகலும் போர் தொடுத்துக்கொண் டிருந்தனர். ஒருமுறை உறையூருக்கணித்தில் ஒன்பது சோழ இளவரசர்கள் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர். சேர நாட்டின் ஒரு பகுதியாகிய பூழிநாடு சேரனாலும் பாண்டியனாலும் வென்று தோற்கடிக்கப்பட்டது. கோட்டையைச் சூழ்ந்து அகழும், அகழைச் சூழ்ந்து காவற்காடும் இருந்தன. அவற்றுள் ஒரு மரம் அரசனால் மிகவும் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. அதற்குக் காவல்மர மென்பது பெயர். போரில் பகை வேந்தனின் முதல் வேலை காவல் மரத்தை வெட்டி அதனால் முரசு இணக்குவதாகும். வீடுகளுக்கு எரியிடுதல், ஆடு மாடு முதலியவற்றைச் சூறையாடுதல், அகழிகளை யானையால் தூர்க்கச்செய்தல் முதலியன அவ்வரசர்களின் வேலைகளாம்.
     பகை அரசனால் கோட்டை முற்றுகை செய்யப்பட்டதாயின், கோட்டைக்குள் ளிருக்கும் வீரர் பலநாட்களுக்கு உணவில்லாமல் போர்செய்வர். அங்ஙனம் சென்ற நாட்களை மதிலின் சுவர்களிற் குறித்து வைப்பர். தோற்ற வீரனின் தலையில் நெய்பெய்து இருகரங்களையும் பின்புறம் நின்று பற்றியிழுப்பர். வென்ற வேந்தனும் வீரரும் உயர்த்