திய வாளுடன் போர்க்களத்தில் துணங்கையாடுவர். இறந்த வீரரின் உடல்களும் சிரங்களும் உருண்டு கிடப்ப அரசன் பெருவிருந் திடுவான். இதற்குக் களவேள்வி யென்று பெயர். போரில் வாள் வேல் முதலியவற்றால் போழப்பட்ட காயங்களை நெடு வெள்ளூசியினாற் றைப்பர். அவர் தங்களுக்குச் சொந்தமான யுத்தப் பிரமாணங்களை ஏற்படுத்தி யிருந்தனர். மாரிக்காலத்தையே பெரும்பாலும் அவர் போர் செய்வதற்கு ஏற்றதாகக் கொண்டனர். |
16. பத்தினிப் பெண்டிர் |
தமிழ்ப் பெண்கள் கற்புக்கணிகலமாய் விளங்கினார்கள். அவர்களைக் குறித்து இலக்கியங்கள் பலவாறு வியந்து கூறுகின்றன. பெண்கள் கற்பினாலேயே மழைபெய்கின்றதென்றும், அது கோடின் மழை வளந் தப்புகின்றதென்றும் முன்னோர் கருதினர். பத்தினிப்பெண்கள் சிலரின் வரலாறு சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. அக்காலத்துக் கணவரை இழந்தோர் `உடன்கட்டை ஏறுவோர், உடனுயிர் நீங்குவோர், விதவை நோன்பினர் என மூவகைப்பட்டனர், |
உடன்கட்டை யேறுவோர், தம் கணவ ரிறந்ததும் தாமும் அவருடன் தீயிற் புகுந்து உயிர் துறப்போராவர். |
உடனுயிர் துறப்போர், தம் கணவர் இறந்தமை கேட்ட பொழுதே தம்முயிர் நீங்கும்உத்தமிகள். இன்னோரையே "காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி-ஊதுலைக் குருகினுயிர்த்தகத் தடங்காது-இன்னுயி ரீவர்" என்று சாத்தனார் ஓதியது. கணவன் இறந்தால் கொல்லன் உலைத்துருத்தி போலப் பெருமூச்சு விடாமல் தன்னடைவே உயிர் நீங்குவர் என்பது இதன் கருத்து. இவ்வரிய பெரிய செயல் தொல்காப்பியத்தில் மூதானந்தம் என்று கூறப்பட்டது. (மூது-பெரிய, ஆனந்தம்=சாக்காடு) |
|
1, ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன் |
தானையாற் கைபுதைத்தான் தார்வழுதி (முத்தொள்) |