"சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே" | | என ஒளவையார் அதியமானைப் பாடுகின்றமையின் அரசர் மாத்திரமல்லர், புலவர்களும் கள்ளருந்துவதில் மிக்க விருப்புடையவர்கள்போல விளங்குகின்றது. கள் என்பதிலிருந்தே களிப்பு என்னும் சொல் எழுந்தது. | 18. உணவு | அக்காலத்து அந்தணர், வேளாண் மக்கள் என்னும் இருபிரிவினரை நீக்கி ஏனோர் ஊனைப் பெரிதும் விரும்பிப் புசித்தார்களெனத் தெரிகின்றது. பெரும்பாணாற்றுப் பசுக்கள் பசும்புற்றரைகளைத் தேடி மெயச்செல்ல, அவற்றின் செழிய கன்றுகள் பந்தர்க் கால்களிற் கட்டப்பட்டு நிற்கும். கோழி, நாய் முதலியன அவ்வில்லங்களைச் சேரமாட்டா. வீடுகள் சாணியினால் மெழுகப்பட்டிருக்கும். வழிபடு தெய்வங்களின் உருவங்கள் அங்கே காணப்பெறும். கிளிகள் வேதம் படிக்கும். அருந்ததியைப் போன்ற சிறந்த நல்லொழுக்கமும் வளையணிந்த கைகளுமுடைய பார்ப்பனப் பெண்கள் நல்ல சுவையுள்ள உணவுகளைச் சமைப்பார்கள். அவ் வீடுகளை அடைந்தால் இராசான்னமென்னும் சோற்றினையும், மாதுளங் காய்களைப் பில்லைகளாக அரிந்து மிளகுதூள் பெய்து கருவேப்பிலை கூட்டி நெய்யில் வெதுப்பிய பொரிலுயல்களையும், மாங்காய் ஊறுகாய் முதலியவற்றையும் உண்ணும்படி பெறுகுவிர்" (பெரும்பாண் 293-310) எனக் கூறப்படுவதால் அந்தணர் ஊன் புசிப்பவர்களெனப் புலப்படவில்லை. `உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனிழு `நோய்கொண்டாற் பார்ப்பாரும் தின்பாருடும்புழு என்னும் முதுமொழிகளும் பார்ப்பார் ஊன் மிசையாதவர்கள் என்பதையே புலப்படுத்துகின்றன. | | |
|
|