"மீன்திரளும் விலங்கின்திரளும் செருக்கி வலையாற் பிடிப்பாரையும், கொன்று இறைச்சி விற்பாரையும் தமக்குப் பகையாய்க் கருதி யஞ்சாதே வலைஞர் முற்றத்தே அம்மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும், வலைஞர் குடிலிலே அவ்விலங்குகள் கிடக்கும்படியாகவும், முற்படக் கொலைத் தொழிலை அவர்களிடத்தினின்றும் போக்கியும், பின்னர்க் களவுகாண்பாரிடத்துக் களவைப் போக்கியும், தேவர்களை வழிபட்டும், யாகங்களைப் பண்ணி, அவற்றான் ஆவுதிகளை அவர் நுகரப் பண்ணியும், நல்ல பசுக்களோடு எருதுகளைப் பரிகரித்தும், அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் அவர்க்கு நிலைபெறுத்தியும், பெரிதாகிய புண்ணியங்களைத் தாங்கள் பண்ணி அவற்றைச் செய்ய மாட்டாதார்க்குத் தானம் பண்ணியும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளைந்த மேழியால் உழவுத் தொழிலை நச்சுதலுடைய உழவர்" (பட்டினப்பாலை-நச், உரை 196-206) என்னும் பட்டினப்பாலையால் வேளாண்மாக்கள் ஊன் உணவு அருந்துபவரல்லர் என்பது வெளிப்படை. | அந்தணராகிய கபிலர், | "புலவு நாற்றத்த பைந்தடி பூநாற்றத்த புகை கொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலி னன்று மெல்லிய பெரும" | (புறம்) | | "மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவு மட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறு பெட்டாங்கீயும்" | (புறம்) | | எனப் பாடியிருத்தல் கொண்டு தமிழ்நாட்டந்தணர் புலாலுண்ணும் இயல்பினர் எனச் சிலர் கூறுவர். | "புலவர் முதலியோர் தங்களை அரசர்களாற் பெரிதும் விரும்பப்படும் பாணர் கூத்தர்போல் வைத்துச் செய்யுட் செய்தல் அக்காலத்து மரபாகலின்..................இங்ஙனமே | | |
|
|