முடியும் முறையைக் கற்றுக்கொண்டார்க ளென்பதற்கு அவர்களுள்ளும் குடுமிக்குக் `கொண்டைழு என்னும் தமிழ்ச் சொல்லே வழங்கிவருகின்றமை போதிய சான்று. மதுரைக்காஞ்சியில் செல்வரைப்பற்றிக் கூறுமிடத்து, "சிவந்து நு்ண்ணிதாகும் வடிவாலே கண்களை மருட்டி, சிந்திவிழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழிலையுடைய சேலைகளை, பொன்னிட்ட உறைவாளோடே அழகுபெறக் கட்டி தோளிலே உத்தரியம் கிடந்தசைய" எனக் கூறப்பட்டிருக்கின்றது. சட்டைதரித்தல் அரசரிடத்தில் சேவகஞ் செய்யும் தாழ்ந்தவருக்குரியதாயிருந்தது. அவர்கள் கஞ்சுகமாக்கள் எனப்பட்டனர். |
பெண்கள் பெரும்பாலும் அரைக்குமேல் உடை இல்லாதிருந்தனர். "கடாஅக் களிற்றின்மேற் கட்படாமாதர், படாஅ முலைமேற் றுகில்" என்னும் குறளால் முதல் வகுப்பினர் முலைக்கச்சு அணிந்தார்கள் என விளங்குகின்றது. அக்காலத்து முலைக்கச்சு இக்காலத்து இரவிக்கை போல்வதன்று. தனங்களை மாத்திரம் இறுகக் கட்டும் நீண்ட கச்சுக்களேயாம். குங்குமம் சந்தனம் முதலிய பூச்சுக்களால் தமது மார்பை மறைத்தல் அக்காலத்துப் பெண்களுக்கியல்பு. கடைத்தரமானோர் மார்பில் சங்கு மணி யணிந்திருந்தனர். அமராவதிச் சித்திரங்களும் பழைய கோபுரங்களிற் காணப்படுகின்ற உருவங்களும் அக்காலத்துப் பெண்கள் அரைக்குமேல் ஆடை அணியும் வழக்கமில்லை என்பதையே தெரிவிக்கின்றன. மலையாள தேசத்தில் இன்றும் இவ்வழக்கம் காணப்பெறுகின்றது. "சீர்நாடு மாதர்தனக் குடந்தேடித் திரிவாற்கு-வார்நாடுந் தடைதீர்ந்த மலைநாடு வாய்ந்ததுவே" என்னும் திரிகூடராசப்பக் கவிராயர் பாடலாலும் இதனுண்மை ஓர்க. பெண்கள் ஒருவகைக் குழம்பினால் முலையில் தொய்யிலும் தோளில் கரும்பும் எழுதுவர். |
"தோண்மேற்-கரும்பெழுது தொய்யிற்குச் செல்வ லீங்காக" | (கலி 116) | |
"தொய்யில் பொறித்த வனமுலையாய்" | (கலி) | |