பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்191

     "இந்துக்கள் கோவிற் சுவர்களிலும் மாடங்களிலும் கோபுரங்களிலும் மத சம்பந்தமான விக்கிரகங்கள் காணப்படுகின்றன. அவ்விக்கிரகங்களைப் பரிசோதித்தால் அக்கால மாந்தரது மனநிலை, ஒழுக்கம், நாகரிகம் முதலியவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக மாமல்லபுரத்திலுள்ள விக்கிரகங்கள் அக்கால மாந்தர் ஆண் பெண் யாவரும் இடுப்பிற்குக் கீழே மட்டுந்தானே உடை உடுத்தாரென்பதையும் அவ்வுடையும் நாபிக்கு மூன்று அங்குலத்திற்குக் கீழேதான் உடுத்தார்க ளென்பதையும் விளக்கும்.

(செந்தமிழ் aaa 5-Dr. G. Jouvean Dubriel)

20. அணிவகை

1. பெண்கள் அணிவகை

     கால்விரலணி-மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரம் முதலியன, காலணி-பாதசாலம், சிலம்பு, தண்டை, கிங்கிணி, தொடையணி, குறங்குசெறி, தோளணி மாணிக்கவளை, முத்துவளை, கையணி-சூடகம், பொன்வளை, நவரத்தினவளை, சங்கவளை, பவழவளை முதலியன. கைவிரலணி-வாளைப்பகுவாய் மோதிரம் (முடக்கு மோதிரம்) இரத்தினங்கட்டின அடுக்காழி. கழுத்தணி-வீரசங்கிலி, நேர் சங்கிலி, நுழைவினை நுண்ஞாண் சவடி, சரப்பளி, முத்தாரம் பிடர் அணி-கொக்குலாய் (முத்தாரமாகச் செய்தததில் நவரத்தினங்களைக் கோத்து முதுகு நிறைய விடும் பின்தாலி) காதணி-நீலக் குதம்பை, மகரக்குழை, தாளுருவி, வல்லிகை, தோடு தலையணி-சீதேவியார், வலம்புரிச் சங்கு, பூரம்பாளை, தென்பல்லி, வடபல்லி, புல்லகம், பொன்னரிமாலை, மகரப்பகுவாய், முஞ்சகம். அரையணி-மேகலை, காஞ்சி, விரிசிகை, கலாபம், பருமம்.
     குறிஞ்சிநிலப் பெண்கள் இலைகுழைகளையே ஆடை ஆபரணங்களாகப் பூண்டனர். இது மக்கள் சீர்திருத்த முறாத காலத்தே யாகும். அக்காலத்து மரம் செடி கொடி