களிற் பறித்து அணிந்த அரசிலை, குழைஓலை, கொந்திள வோலை, சீர்திருத்தகாலத்து ஆபரணங்களாக மாறிவந்தன வென்பது கவனிக்கத்தக்கது. பழைய தமிழரது பூவாபரணம், சாந்துப் பூச்சு என்பனவற்றின் ஞாபகம் இந்து சமயக் கோவில்களிலே `பூவங்கிக் கோலம்ழு `சந்தனக் காப்புழு `குங்குமார்ச்சனைழு என்னுங் கருமங்களிலே இந் நாள்வரையுங் காக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் தலைமயிருக்குப் பரிமள மூட்டுவர். மயிரை ஐந்து பிரிவாக வகுத்துப் பின்னி ஒன்றாக முடிந்து தொங்கவிடும் வழக்கம் அவர்களுக்குள் இருந்தது. இருபாலாரும் பரிமள வர்க்கங்களையும் தேகத்திற் பூசுவோராயிருந்தனர். பெண்கள் கண்ணுக்கு மை யெழுதுவர். | 2. ஆடவர் அணிகல வகை | தலையணி-முடி. தோளணி-பதக்கம், வாகுவலயம் காதணி-குண்டலம். கையணி-கங்கணம், வீரவளை. அரையணி-அரைஞாண். கையணி-வீரக்கழல், வீரகண்டை. விரலணி-மோதிரம். கலித்தொகை 85 ஆம் பாட்டில் ஓர் தலைவனின் மகன் அணிந்திருந்த ஆபரணங்களைப்பற்றிக் கூறப்படுகின்றது. அவை காலிற் பொன்னாலாய வாய் பிளந்த சதங்கையும், அரையிற் பொன்மணிகளை யுடைய வடமும் அதன்மேல் பவழவடமும் அவற்றின்மேல் ஐதாய் கழல்கின்ற ஒரு பூந்துகிலும், கையில் ஞெண்டின் கண்போல அரும்பு வேலை செய்த கோற்றொழி லவிர்கின்ற தொடியும், இடையில் வெட்டாத வாளும் மழுவும் தொங்க விடப்பட்ட இடத்தையுடைய பூணும், மார்பில் கருமுத்தும் மணியும் சேர்ந்த முத்து வடமும், அதன்மேலே நீல மணியாற் பண்ணின, கண்டார் மருளும் மாலையும் எனுமிவ்வாபரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. | 21. அரசன் | அரசன் வலிமையுள்ளவனா யிருந்தான். அவன் கையிலே வீரவாளையும் காலிலே வீரக்கழலையு மணிந்திருந் | | |
|
|