பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்193

தான். அவனது சிங்காசனம் யானைத் தந்தத்தினாலும், பொன்னினாலும், நவமணிகள் குயிற்றிச் செய்யப்பட்டு ஒரு செய்கைச் சிங்கத்தின் தலையால் தாங்கப்பட்டது. அதன் மேல் வெண்கொற்றக்குடை விளங்கியது. அவன் யவன மெய்க்காப்பாளராலும் பரிசனங்களாலும் சூழப்பட்டுக் காட்சிக்கெளியனா யிருந்தான். சிறப்புக் காலங்களில் மாத்திரம் அரசி அரசனுடன் இடம்பெறுவாள். ஆனால் அவள் ஒருபோதும் முடிசூடுவதில்லை. அரண்மனையின் அந்தப்புரத்து, உயர்குடும்பப் பெண்கள், கூன், குறள், ஊமர் முதலியோர்க்கு மாத்திரம் இடமுண்டு. ஆண்கள் அங்கு நுழைதல் கூடாது. புலவர்களிடத்தில் அரசன் மிக அன்பாக விருந்தான். அரண்மனைப்புலவன் அவன்பக்கலில் எப்போதும் இருப்பான். நியாயம், வீரம், கொடை என்னும் மூன்றும் அரசனுக்குப் பெருமை யளித்தன. இம்மூன்றினையும் குறிப்பிட மூன்று வகைப்பட்ட முரசுக ளிருந்தன. அரசனைச் சூழ்ந்து 1எண்பே ராயமும் ஐம்பெருங்குழுவுமிருந்தன. அமைச்சர், புரோகிதர், சேனாதிபர், தூதுவர், சாரணர் என்னும் ஐவரும் ஐம்பெருங் குழுவிலடங்குவர். இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல்

1, "அமாத்தியர் புரோகிதர், சேனாபதியர்
தவாத் தொழிற் றூதர், சாரணரென்றிவை
அரசர்க் காகும் ஐம்பெருங் குழுவே,
காரணக் கிளைஞரும் கருமவிதி காரரும்
கனகச் சுற்றமும் கடைகாப் பாளரும்
நகர மாக்களும் நளிபடைத் தலைவரும்
இவுளி மறவரும் யானை வீரரும்
அரசர்க் கெண்டுணை யாகு மென்ப,
அடுத்தநட் பாளரும் அந்த ணாளரும்
மடைத்தொழி லாளரும் மருத்துவக் கலைஞரும்
நிமித்த காரரும் நீணில வேந்தர்க்
குரைத்த வெம்பெயர் உறுதிச் சுற்றம்,
இங்ஙனம் உரைத்தமுப் பாலும் உயர்குடை வேந்தர்க்குப்
பகுத்த பதினெண் கிளைப்பா லோரே"