வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என அரசியல் வகிக்குந் தலைவரு மிருந்தனர். கரும வினைஞரென்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோ ரென்றும், கணக்கியல் வினைஞ ரென்போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்குமறிஞரென்றும், தரும வினைஞர் நாட்டினறங்களைப் பாதுகாப்போரென்றும், தந்திர வினைஞராவார் படைகள் சம்பந்தமாகத் தலைமைவகிப்போரென்றும், பெருங்கணி அரசனது காரியங்கட் குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்போர் என்றும் அறியப்படுகின்றனர். கரணத்தியலவர் (கணக்கர்) கரும விதிகள் (ஆணைநிறைவேற்றுமதிகாரிகள்), கனகச் சுற்றம் (பண்டாரம் வகிப்போர்) கடைகாப்பாளர் (அரண்மனைக் காவலர்) நகரமாந்தர் (நகரத்திலேயுள்ள பெரியார்) படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் என்போர் எண்பேராயத்துள் அடங்குவர். | 22. புறநானூற்றிற் காணப்படும் சில பழக்க வழக்கங்கள் | "அஞ்ஞான்றினர் மிகவும் நெடிய ஆயுளுடையவர்கள். வயதால் முதிர்ந்தும், உடல் தளர்ந்தும், நடமாடச் சக்தியற்றும் உயிர்துறவாம லிருக்கும் கிழவரை மட்பாண்டங்களில் வைத்து வழிபட்டு வருவார்கள். அப்பாண்டங்களை முதுமக்கட் டாழி யென்பர். எளியவராயினும் இழிகுலத்தோராயினும் கற்றவரை மிகவும் போற்றி மரியாதை செய்வர். கற்றவர்கள் யாண்டும் முதன்மை பெற்றுச் சபையேறுவதற்குச் சாதி வேற்றுமை முதலிய குறைகள் தடைசெய்வன வல்ல. யுத்த முனையிலே புற முதுகிட்டுப் பின்வாங்காமல் போர்புரிந் திறப்பவர்கள் சுவர்க்கம் புகுவார்க ளென்ற நம்பிக்கை யிருந்தமையால், அரசர்கள் அதிபதிகளானோரில் யாவரொருவராயினும் அவ்வாறு மடியாமல் பிணி மூப்பு முதலியவற்றா லிறந்தால் அவரின் பிரேதத்தைத் தருப்பைமேற் கிடத்தி நெஞ்சை வாள் கொண்டு பிளப்பர். அங்ஙனஞ் செய்வதால் உயிர் சுவர்க்கம் புகு | | |
|
|