பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்195

மென்பதே அவர்கள் கருத்து. மற்றவர் பிரேதங்களைத் தாழி என்றும் ஈமத்தாழி யென்றும் வழங்கப்பட்ட பாண்டத்திலிட்டுத் தகனஞ் செய்வர். தலைவர்கள் துஞ்சுங்கால் அவரோடு தீமூழ்கி உயிர்விடல் மனைவியர்க் கியல்பாயிருந்தது. நிரை கவர்தலும், போர்புரிந்து அவற்றை மீட்டலும் அடிக்கடி நிகழும். யுத்தத்திற் கைவந்த வீரர்களை யாண்டுங் கனஞ்செய்து போற்றி வழிபடுவர். அன்னவரி லொருவர் மடியுங்கால் அவர் பொருட்டு ஒரு கற்சிலையை நட்டு அவரின் நாமத்தையும் கீர்த்திச் சிறப்புக்களையும் அதன்கண் தீட்டிப் பந்தரிட்டுக் கொடி விதானித்துப் பூமாலைகளையும் மயிலிறகுகளையுந் தூக்கிப் பலி முதலியன செலுத்தி வழிபடுவார்கள். ஆயுதங்களுக்கு நெய்பூசிப் பூமாலை சாத்திப் பூசனை புரிவர். மாற்றவரின் அரண்களையுடைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கழுதைபூட்டி அரசர்கள் துயில்நீத்தெழும்புமாறு சங்கம் முழக்கி எக்காளமூதுவர். மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தார் நட்ட பயிருக்கிசைய மழை கூடவும் குறையவும் வேண்டிப் பலி செலுத்தித் தெய்வதம் பரவுவார்கள். வினைப்பயனே பிறவிக்குக் காரணமென்றும், வேதாகமப் பொருள்கள் மெய்ப்பொருள்களென்றும் கடவுளொருவ ருள ரென்றும், நம்பி ஒப்புக் கொள்ளாதவர்களை மிகவும் இகழ்ந்து அருவருத்து யாண்டும் புறக்கணிப்பர். செல்வழிகளில் சிவாலயங்கள் கண்ணெதிர்ப்படின், அரசர் தாமும் வாகனமிழிந்து தங்கள் வெண்கொற்றக் குடைகளைச் சாய்த்து வணங்கிச் செல்வார்கள். அரசர்கள் தம்பொருட்டு மாத்திரமன்றித் தம் பிரசைகளின் நலங்களைக் குறித்தும் அடிக்கடி பற்பல வேள்விகளையும் யாகங்களையுஞ் செய்வார்கள். அங்ஙனஞ் செய்துழி அந்தணர் பாவலர்கள் முதலோரும் பலதிசை மன்னர்களுங் கூடிக் குழுமிக் களிப்பெய்துவர். ஈகையே தருமங்களெல்லாவற்றினும் மிகச் சிறந்ததென்று யாண்டும் பாவலர் வியந்து கூறுவர். செய்குன்றியற்றிக், கழங்காடிப் போதுகொய்து புனல் விளையாடிப் பொழுது போக்குவர். ஆடவரைப்போற் பெண்களுங் கள்ளருந்திக்