பக்கம் எண் :

196தமிழகம்

களிகூர்வர். கள்ளில் காரமேறும்படி அதனை வேய்ங்குழல் முதலியவற்றி லடைத்தும் மட் பாண்டங்களிற் பெய்தடக்கியும் வைப்பார்கள். (தமிழ் வரலாறு பக்.. 83-84)

23. பொழுது போக்கு

1. பெண்கள் பொழுதுபோக்கு

     பெண்களுக்கு வீட்டில் கிளிப் பிள்ளைகளைப் பேசப் பழக்குதல், வள்ளை அம்மானை என்னும் பாட்டுகளைப் பாடுதல், கழங்கு அன்றேல் பந்து விளையாடுதல் முதலியன சிறந்த பொழுது போக்குகளாகும்.
"கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
     கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
     கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந்தாழ்ந் தாட
வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாட
     மணிவடமும் பொன்ஞாணும் வார்முலைமேலாடப்
பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
     பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்."

(சூளாமணி-சுயம்வரம்)

     மாலைக்காலத்தில் செல்வர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களை வீதிவழியே செலுத்திச் செல்வர். உப்பரிகைகளினின்று வெளியே நோக்கும் அவர் மகளிரிடத்திருந்தும் வரும் நறுமணம் வீதிகளில் வீசும். அழகாக உடுத்திய வாலிபர் அழகிய ஆபரணங்களையும் பூந்தாரையும் அணிந்த பரத்தையருடன் வீதிவழியே உலாவப் போவர். ஆடவர் பரத்தையருடன் நட்புக்கோடல் இழிவாகக் கருதப்படவில்லை. `பரத்தையிற் பிரிதல் எல்லார்க்கு முரித்தே,ழு என்பர் தொல்காப்பியர். சேவல் கவுதாரி ஆட்டுக்கிடாய் முதலியவற்றைப் போர்க்கு விடுதலும் அக்காலப் பொழுதுபோக்குகளாகும்.