2. சிறுவரின் பொழுதுபோக்கு |
சிறார், தச்சராற் செய்யப்பட்டுச் சிறிய குதிரைகளா லிழுக்கப்படும் தேர்களிற் செல்லும் இன்பத்தை எய்தாராயினும் தம் கைகளினால் விளையாட்டுத்தேரை இழுத்து இன்புறுவர். |
"தச்சன் செய்த சிறுமா வைய மூர்ந்தின் புறாஅ ராயினுங் கையி னீர்த்தின் புறூஉ மிளையோர்" | (குறுந்-61) | |
சிறிய பெண்கள் கடலிலே நீராடும்போது மணலிலே சிறு வீடுகள் இழைத்து விளையாடுவர். (ஷ--326) வயிர உலக்கையினால் அவலிடிக்கும் பெண்கள் உலக்கையை எறிந்துவிட்டு வண்டலில் விளையாடுவார்கள். (ஷ--238.) |
ஊஞ்சல் (உஞ்சால்) ஆடுவதும் சிறுவர்களின் பொழுதுபோக்காகும்) |
"பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாய மூக்க." | |
பள்ளிக்குப் போகாத சிறார், வேப்ப நீழலில் கோடுகள் கீறி நெல்லிக்காய்கொண்டு கழங்காடுவார்கள். |
"வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்." | (நற்-3) | |
பெண்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மணலில் கழங்காடுவார்கள், | (நற்-79) | |
சிறார் குளங்களில் குதித்து ஆழ்ந்து கல் மண் முதலியவற்றை எடுத்து விளையாடுவார்கள். தாயம் ஆடுதல் பெரும் பாலார் பொழுதுபோக்காகும். "ஈரைந்து பெற்றான் உள்ளம் போல்" (கலி). |
24, பெண்கள் கல்வி |
தமிழ் இலக்கியங்களில் பல பாடல்களைச் செய்தவர்கள் பெண்புலவர்களாகக் காணப்படுகின்றனர். ஆடவரைப் |