வறியவர் வீடுகள் மண்ணினால் எடுக்கப்பட்ட சுவர்களுடையன, புல்லினால் அல்லது தென்னங் கீற்றுகளினால் வேயப்பட்டன. வீட்டின் முன்புறத்தில் பந்தர் இருக்கும். அதனைத் தலைவாயில் என்று வழங்குவர். சுவர்கள் சிவந்த மண்ணினால் மெழுகப்பட்டிருந்தன. பட்டினங்களில் வீடுகள் செங்கல்லினாற் கட்டப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டன. அவற்றில் மானின் கண்போன்ற சாளரங்கள் வெளிச்சம் புகுவதள்காக அமைக்கப்பட்டன. சில கோட்டை கொத்தளங்கள் செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் எடுக்கப்பட்டன. |