பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்199

     "புல்வேய் குரம்பை" "சில்காற் றிசைக்கும் பல்புகை நல்இல்" "இலைவேய் குரம்பை" எனப் பத்துப் பாட்டில் சொல்லப்படுவதை நோக்குக.

3. பொறிகள்

     எந்திரச் செய்கைகளால் மாட்சிமைப்பட்ட ஊர்திகளும் பிறவும் இருந்தன. கார் நாற்பது 21 ஆம் பாட்டில் `பொறிமாண் புனைதிண்டேர்ழு எனக் கூறப்படுதல் காண்க. இதனால் குதிரை முதலியவற்றால் இழுக்கப்படாது இயந்திரத்தினால் இழுக்கப்படும் தேர் இருந்ததென விளங்குகிறது. பொறிகளால் நீர் வற்றவும் நிறையவும் செய்யப்படும் கிணறுகளும் வாவிகளுமிருந்தன. அவை, எந்திரக் கிணறுழு, `எந்திரவாவிழு என்னும் பெயர்களால் அறியப்பட்டன. பெருங்கதையில் பல பொறிகளின் விவரம் காணப்படுகின்றது. அவைகளாவன, "காளைகளின்றி விரைந்து செல்லும் எந்திரவண்டியும், பல வீரர்களை ஆயுதங்களுடன் தன்னுள்ளடக்கிக்கொண்டு உயிருள்ளதுபோல் நடந்து சென்று மயக்கும் யானைப்பொறியும், ஏற விரும்பியவர்களைத் தன்னுள் ஏற்றிக்கொண்டு பார்க்கவேண்டிய இடங்களை அவர்கள் பார்க்கும்படி ஆகாய வழியே செல்லும் விமானமும், காலத்தைக் காட்டும் எந்திரமும், கடிகையாரமும் (கடிகாரமென இக்காலம் வழங்கும்),-கழுத்தில் மாலையாயணிதலின் ஆரமெனப்பட்டது-(கடிகை-ஆரம்) நாண்மீன் முதலியவற்றின் தோற்றத்தையும் அத்தமித்தலையும் புலப்படுத்தும் பொறிமண்டிலத்தை உள்ளே பெற்று அரசமங்கையர் ஏறுதற்குரித்தாயிருந்த வண்டியும், பிடிகையும (இப்போதுள்ள ஈருருளி Bicycle-போன்றது) இன்னும் இவை போன்ற பல விசித்திரப் பொருட்களுமாம்."

4. படுக்கை

     "சிங்கக் கான்மேல் தைத்த தூங்கு கட்டிலின் இலங்கும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவியாற் செய்த மெல்லிய படுக்கை" என கலித்தொகை 13 இல் ஒரு தலைவனின்