பக்கம் எண் :

200தமிழகம்

படுக்கையின் விபரங் காணப்படுகின்றது. நெடுநல்வாடையில் யானைக் கொம்பினாற் செய்யப்பட்டதும், நாடாவினாற் பின்னப்பட்டதும் பல்வேறு மெத்தைகள் போட்டு பூக்களி னிதழ் பரப்பித் துகிலின் தூமடி விரிக்கப்பட்டது மாகிய கட்டில் என்றும், கட்டிலின் மேல் விதானத்தில் திங்களும் உரோகிணியும் எழுதப்பட்டிருந்தனவென்றும் கூறப்படுகின்றது.
     "புலிவடிவமைந்த காலையுடைய கட்டிலில் எலிமயிராற் செய்யப்பட்ட பூத்தொழிலையுடைய போர்வையை விரித்துக், கப்பலிலே வந்த பலவகையான படுக்கைகளில் ஆராய்ந்து படுத்து" எனப் பெருங்கதையில் கூறப்படுகின்றது. இவை செல்வர்களுக்குரிய படுக்கைகளாகும்.
     ஆயர் தடிகளினால் வரிந்து கட்டப்பட்ட கட்டிலில் ஆட்டுத்தோலைப் பாயாகக்கொண்டு உறங்குவார்க ளென்றும், எயிற்றியர் மான்றோலைப் படுக்கையாகக் கொள்வார்களென்றும் இலக்கியத்திற் சொல்லப்படு்கி்ன்றன.

5. விளக்குகள்

     வறியோர் மண்ணினால் செய்யப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்தினர். ஏனையோர் இரும்பு, செம்பு, வெண்கலம் முதலியவற்றாற் செய்யப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்தினர். யவனர்களாற் கொண்டுவரப்பட்ட அன்னவிளக்கு, பாவை விளக்கு, முதலியனவும் உபயோகிக்கப்பட்டன.
               `யவன ரோதிம விளக்குழு                 (பெரும்பாண்)
               `பாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழலழு    (முல்லைப்பாட்டு)
               `யவனப் பாவை அணி விளக்குழு           (பெருங்கதை)

6. பட்டங்கள்

     இக்காலம் அரசரால் அளிக்கப்படும் பட்டங்களைப் போல் தமிழ் அரசர் போர்வீரருக்கும் பிறருக்கும் பல பட்