முத்துக்களைத் தவிர வேறு விலையுயர்ந்த பொருட்களையும் அரசன் வைத்திருக்கிறான். அவன் பலவகை இரத்தினங்கள் பதித்த ஆரங்களைக் கழுத்தில் அணிந்திருக்கிறான். 104 பெரிய முத்துக்களும் இரத்தினங்களும் சேர்க்கப்பட்ட ஒரு பட்டுநூல் அவன் மார்பிலே தொங்குகின்றது. அவன் காலையிலும் மாலையிலும் 104 துதிகளைக் கடவுளுக்குச் சொல்லவேண்டியிருப்பதால் இங்ஙனம் அணிந்திருக்கிறானென்று சொல்லப்படுகின்றது. இவ்வகையாகவே இவனது முன்னோரும் செய்துவந்தார்கள். முன்னோர் வைத்திருந்த ஆரத்தையே இவன் பெற்றான். |
முத்துக்கள் அழுத்திச் செய்யப்பட்ட மூன்று பொன் வளையல்களை அரசன் புயத்திலே பூண்டிருக்கிறான். அவைபோன்ற வளையல்களைக் காலிலும் அணிந்திருக்கின்றான். கால்விரலில் அவைபோன்ற மோதிரங்களையு மணிந்திருக்கின்றான். |
இங்ஙனம் அரசன் அணிந்திருக்கும் அணிகளின் விலை ஒரு நாட்டின் வருவாயிலும் அதிகமாகும். இவ்வகையான பொருட்கள் அவனிடத்திற் பல உண்டு. |
அவனிறக்கும்போது அவனுடைய பிள்ளைகள் களஞ்சியத்தைத் தீண்டமாட்டார்கள். `எங்கள் தந்தை எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாங்களும் தேடி வைத்திருக்க வேண்டுழு மெனச் சொல்லுகிறார்கள். வாசிவ் (Wassaf) என்னும் மகமதிய சரிதாசிரியர் கூறுவதிலிருந்து மார்க்கோபோலோ பாண்டியர்கள் திரட்டி வைத்திருந்த பொருள் நிலையைச் சரியாக அறிந்திருந்தானென்பது விளங்குகின்றது. "குலசேகரனது கருவூலம் விலைமதிப்புள்ள பொருள் நிறைந்தது. அவனது கருவூலம் 12,000 கோடி உள்ளதா யிருந்தது. இதைவிட முத்து பவழம் இரத்தினம் முதலிய பல பொருட்கள் இருந்தன. அவனுடைய செல்வத்தை அளவிட்டுக் கூறமொழி இடங்கொடாது," என அவன் கூறியுள்ளான். மார்க்கோபோலோ, அரசனையும் அவனது சபையையுங் |