பக்கம் எண் :

206தமிழகம்

     "இந்த நகரத்திலுள்ள சனங்களும் இந்தியாவின் மறு இடங்களி லுள்ளவர்களும் `தாம்பூலம்ழு என்னும் ஒருவகை இலையை எப்பொழுதும் வாய்க்குள் வைத்து மெல்லுகின்றார்கள். அவர்கள் அவ்விலையை மென்று உமிழ்நீரை வெளியே துப்பிவிடுகின்றனர். அரசர்களும் செல்வர்களும் கருப்பூரம் முதலியன கலந்த வாசனைப் பொருட்களுடன் அதனைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வழக்கம் சுகத்துக்கும் மிகவும் நல்லதெனச் சொல்லப்படுகிறது.
     இங்குக் குதிரைகள் கிடைப்பதில்லை. இதனால் பிற நாடுகளிலிருந்து குதிரைகள் வாங்குவதில் இந்நாடு பெருந் தொகைப் பணத்தைச் செலவிட்டது. கிஸ் (Kis)் ஹோம்ஸ் (Hormes) டோவர் (Dofar) சோஏர் (Soer) எடின் (Aden) முதலிய நாட்டவர்கள் இந்த நாட்டு அரசனுக்கும் அவனது நாலு சகோதரருக்கும் விற்கும்படி குதிரைகள் கொண்டுவருவார்கள். ஒரு குதிரையின் விலை 500 சக்கி (Saggi) பொன்னாகும். அது 100 வெள்ளி மார்க்ஸ் (Marks)க்குச் சரி.
     `வாசிவ்ழு பின்வருமாறு கூறுகிறார்.
     குதிரைகள் இங்கு வந்ததும் பச்சைவாளி கொடுப்பதற்குப் பதில் வறுத்த வாளியையும், தானியங்களையும் நெய்யுடன் கலந்து கொடுக்கிறார்கள். குடிப்பதற்குக் காய்ச்சிய பசுவின் பாலைக் கொடுக்கிறார்கள். அவர்கள் 40 நாட்களுக்கு அவைகளைக் கயிறுகளால் பந்தியிற்கட்டிக் கொழுக்கும்படி விடுகிறார்கள். இந்தியப் போர்வீரர் அவற்றின்மீது துட்ட தேவதைகளைப் போல ஏறிச் சவாரி செய்கிறார்கள். சிறிது காலத்துக்குப்பின் வேகமுள்ள குதிரைகள் பலமற் றனவாய் உபயோகமற்றுப் போகின்றன. இதனால் வருடா வருடம் புதிய குதிரைகள் வாங்க நேர்கின்றது.
     மார்க்கோபோலோ கி.பி. 1254 முதல் 1321 வரையில் வாழ்ந்தவன்.

பெரும்பாணாற்றுப்படை

     (இதில் பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் நன்கு கூறப்பட்டிருக்கின்றன.)