பிறநாடுகளினின்றும் வந்த வணிகர் மாணிக்கம், முத்து, சந்தனம் முதலியவற்றை எங்கும் திரிந்து விற்பார்கள். அவர்களுடைய மார்புகள் அம்புகளாற் கிழிக்கப்பட்டு ஆறிய தழும்புகளுடையன. தம்மை எதிர்ப்போரைத் தாக்குவதற்குக் கையிலே வேல் பிடித்திருப்பர், யானைத் தந்தத்தால் கடைந்தெடுத்த உறையிலே இட்ட வாளை வரிகளையுடைய சீலையிலே கோத்து தோளின் ஒரு பக்கத்தே தொங்கவிட்டுச் சட்டையிட்டுச் செருப்புத் தொட்டு ஒத்த கனமாகச் சேர்ந்த மிளகுப்பொதிகளைக் கவர்பட்ட வழிகளில் சுமந்து செல்லும் கழுதைகளின்பின் செல்வார்கள். இவ்வாறு சகடங்களும், கழுதைகளும் செல்கின்ற கவர்பட்ட வழிகள் சந்திக்கின்ற இடத்தில் அரசனால் நியமிக்கப்பட்ட சுங்கங் கொள்வோர் விற்படையுடன் காத்திருப்பார்கள். | அக்காட்டிலே எயினர்களுடைய சிறு குடிசைகள் காணப்பெறுகின்றன. அவை அணிலும் எலியும் நுழையாதபடி ஈந்தின் ஓலையினால் வேயப்பட்டு முட்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினை யுடையனவாயிருக்கும். | பிள்ளையைப் பெற்ற எயிற்றியர் அக்குடிசைகளின் ஒருபுறத்தே மான்றோல்களில் முடங்கிக் கிடக்க, மற்றவர்கள் பாரையினால் கரம்பை நிலத்தைக் கிளறி, எறும்பு சேர்த்துவைத்த புல்லரிசியை எடுத்துவந்து 1பார்வைமான் கட்டப்பட்ட விளவின் நிழலையுடைய முற்றத்திலே தோண்டப்பட்ட நில உரலிலே பெய்து வயிர உலக்கையினால் குற்றி, ஆழ்ந்த கிணற்றில் உவர் நீரை மொண்டுவந்து, பழைய ஒறுவாய்ப் போன பானையிலே உலையை வார்த்து, முறிந்த அடுப்பிலே வைத்து ஆக்குவார்கள். அவர் குடிசை |
| 1, வேட்டையாடுவோர் மிருகங்களையோ பறவைகளையோ தங்கள் தொழிற்கிசைந்து நடக்குமாறு பழக்கி வலை முதலியன கட்டுமிடத்தில் விடுவார்கள். இவற்றால் நம்பிக்கைகொண்டு இவற்றின் இனங்கள் வந்து கண்ணியில் மாட்டிக்கொள்ளும். இவற்றுள் பட்சியைப் பார்வைப் பட்சியென்றும், மிருகத்தைப் பார்வை மிருகமென்றுங் கூறுதல்மரபு. | | |
|
|