பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்209

களை அடைந்தால் இவ்வாறு சமைக்கப்பட்ட சோற்றை உப்புக் கண்டத்துடனே தேக்கிலையில் இட்டு உண்ணும்படி கொடுப்பார்கள்.
     இக்குடிசைகளைக் கடந்து சென்றால் எயினர் அரணைக் காணலாம். அங்கு மதில்களை யுடையனவும் ஊகம்புல்லினால் வேயப்பட்டனவுமாகிய வீடுகள் உண்டு. அவற்றுள் பகைவரைக் குத்தியதால் கூர்மழுங்கிய வேல்கள் மணி கட்டின பரிசைகளோடு விற்களிற் சாத்தப்பெற்றிருக்கும். தலைவாயிலின் திரண்ட கால்களில் அம்புக் கட்டுகளும் துடியும் தூங்கும். சங்கிலியிலே கட்டப்பட்ட நாய்கள் வீட்டைக் காவல்காத்து நிற்கும். வீட்டைச் சுற்றி முள் வேலியும் அதனைச் சூழ்ந்து காவற்காடும் காணப்படும். வாயிலின் உட்கதவுகள் திரண்ட மரங்களால் தாள்போடப்பட்டிருக்கும். இவ்வகையான எயினர் அரண்களில் தங்கினால், நாய்கள் கடித்துக்கொண்டுவந்த சங்குமணி போன்ற முட்டைகளையுடைய உடும்பின் பொரியலாலே மறைக்கப் பட்ட சோற்றை வீடுகடோறும் பெறுவாய்.
     அப்பாற் சென்றால் குறிஞ்சிநிலத்தை அடைவாய். அங்கே வாட்டொழிலைச் செய்யும் குடியிற் பிறந்த புலியின் மீசையைப் போன்ற தாடியையுடைய குறவர் தலைவன், கொடிய வில்லையுடைய காவலருடனே காவலையுடைய பகைவரது முல்லை நிலத்தை அடைவான். விடியற்காலையிலே அவர்கன் பசுக்களை ஓட்டிக் கொண்டு போய்க் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பான். பின் தனது வீட்டிலே நெல்லாற் செய்த கள்ளை உண்டு, ஆட்டுக்கிடாயை முற்றத்தில் அறுத்து உண்டு, மத்தளங் கொட்ட நடுவே நின்று, இடத் தோளை வலப்பக்கத்தே வளைத்துக்கொண்டு பகற்பொழுதிலே மகிழ்ந்து ஆடுவான். இவ்வகையினதாகிய குறிஞ்சி நிலத்தைக் கடந்தபின்பு முல்லை நிலத்தை அடைவீர்கள்.
     அங்கே வீடுகள் குறுகிய கால்களிற் கட்டப்பட்டன. அக்குறுகிய கால்களில் ஆட்டுமந்தைகள் தின்பதற்குத் தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறிய பற்றைகள் உண்டு. கதவுகள் கயிற்றினால்