வரியப்பட்டன. கயிற்றினால் வரியப்பட்டு வரகு வைக்கோல் பரப்பப்பட்ட படுக்கையில் கிடாயின் தோலைப் படு்க்கையாகவுடைய முதியோன் காவலாகத் துயிலும் பல குடிசைகள் அங்குக் காணப்படும். முற்றத்திலே அறையப்பட்டிருக்கின்ற முளைகளில் தாமணிகளையுடைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். சீழ்க்கை அடிக்கையினாலே இடையர் மடித்த வாயையுடையவர்களா யிருப்பார்கள். |
விடியற்காலத்திலே மாமை நிறத்தையும் தாளுருவி அசைகின்ற காதினையுமுடைய ஆய்மகள் மத்து ஆரவாரிக்கும்படி தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுப்பாள். பின்பு புள்ளியாகத் தயிர்தெறித்த மோர்ப் பானையைப் பூவாற் செய்த சும்மாட்டின்மேல் வைத்து மோரை விற்பாள், விற்றதினாற் கிடைத்த நெல் முதலியவற்றைக் கொண்டுபோய்த் தனது சுற்றத்தாரை உண்ணப்பண்ணுவாள், அவள் தான் நெய்யை விற்ற விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னை வாங்காளாய்ப், பாலெருமையையும், நல்ல பசுவினையும், எருமைநாகினையும் கொள்ளுவாள், இவ் வகையினதாகிய ஆயர்குடியிருப்புகளில் தங்குவாராயின், தினையரிசியாலட்ட சிலுத்த சோற்றைப் பாலுடனே பெறுவாய், |
அப்பால் முல்லை நிலத்து ஊர்களை அடைவீர்கள். அங்கு வீடுகளின் முற்றத்தில் வரகு முதலியன போட்டு வைக்கும் கூடுகள் (குதிர்) காணப்படும். வரகு திரிகைகள் தலைவாயிலில் நடப்பட்டிருக்கும். கொட்டில் வீடுகள் வரகு வைக்கோலினால் வேயப்பட்டிருக்கும். அவ் வீடுகளின் ஒருபுறம் அடுப்பெரித்ததினால் புகைசூழ்ந்திருக்கும். வீடுகளின் சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். அங்கே தங்கினால் வரகு சோற்றைப் பெறுவாய். |
முல்லை நிலத்தைச் சார்ந்த மருதத்தில் வீடு நிறைந்த உணவினையுடைய உழவர் வயல்களை விதைப்பார்கள். அறுக்கும் பருவத்தில் அதன்கண் தங்கும் குறும்பூழ் (காடை) |