பறக்கலாற்றாத இளைய பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு முல்லை நிலத்தே செல்லும். வயல்களிலுள்ள தேனாறுகின்ற பூவை மாலையாகக் கட்டிச் சூடி, அதனை வெறுத்த தொழில் செய்வாருடைய பிள்ளைகள் முள்ளியின் கரிய பூவைப் பறித்துக் கோரையைப் பல்லாலே மென்று கிழித்த நாராற் கட்டிய மாலையை ஈருடைய தலையிலே யணிந்து கடம்பின் தாதை மார்பிலே அப்புவார்கள். அவர்கள் பழஞ்சோற்றை வெறுத்துப்பன்றி முதலிய காத்தற்கு வரம்பிலே கட்டப்பட்ட புதிய வைக்கோலால் வேய்ந்த சிறிய குடிலின் முற்றத்தே அவலிடிப்பார்கள். அவலிடிக்கும் உலக்கையினோசை கிள்ளைகளை வெருவச்செய்யும். வளைந்த கதிரினையுடைய வயலினிடத்து விளைந்த நெல்லை யறுப்போர் சிலந்தியினது நூல்கள் பக்கத்தே சூழ்ந்த போர்களின் அடியை எடுத்து விரிப்பார்கள். பின் ஏர் கடா விடுவார்கள். வைக்கோலையும் கூளத்தையும் அதனினின்றும் நீக்கி மேற்காற்றிலே தூவித் தூற்றியன பொலி மலைபோலத் தோன்றும். இவ்வகையான மருத நிலஞ்சேர்ந்த குடியிருப்புக்களில் வீட்டின் பக்கத்தே தறிகளில் நெடிய கயிறுகளால் கன்றுகள் கட்டப்பட்டு நிற்கும். ஏணி எட்டாத உயரத்தையுடையதும் தலை திறந்து உள்ளே சொரியப்பட்ட பழைய நெல்லினையுடையதுமாகிய தானியக் கூடுகள் வீடுகளில் உண்டு. தச்சச்சிறார் செய்த சிறு தேர்களைப் பிள்ளைகள் உருட்டிச் சென்ற களைப்பாலே செவிலித்தாயாருடைய பாலை நிறைய உண்டு படுக்கையிலே துயில்வார்கள். இவ்வகையான வறுமை தெரியாத குடியிருப்பினையுடைய ஊரிலே நல்ல நெற்சோற்றினைக் கோழிச் சேவலின் சமைத்த பொரியலோடே பெறுவாய். | அங்கே புகை சூழ்ந்த கொட்டில்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுவார்கள். அக் கொட்டில்களை அடைந்தால் முன் கருப்பஞ் சாற்றைக் கொடுத்துப் பின் கட்டியை உண்ணும்படி தருவார்கள். | அப்பாற் சென்றால், வலைஞர் குடியிருப்பை அடைவீர்கள். அவர்கள் வீடுகள் காஞ்சி வஞ்சி முதலிய மரங்களின் | | |
|
|