பக்கம் எண் :

212தமிழகம்

கொம்புகளைக் கைகளுக்கு நடுவே தூணாக நட்டு, மூங்கில் தடிகளை வரிச்சாக நிறைத்துத் தாழைநாராற் கட்டித் தருப்பைப் புல்லால் வேய்ந்த தாழ்ந்த இறப்பை யுடையனவாகும். மீன்களை வாரி எடுக்கும் வலைகள் முற்றத்திலே காணப்படும். தலைவாயிலின் கூரையிற் படர்ந்துள்ள சுரைக்கொடியில் காய்கள் தொங்கும். இளையவர்களும் முதியவர்களும் தலைவாயிலிடத்தில் கூடியிருந்து, பின் இறாலும் கயலும் பிறழும் ஆழ்ந்த குளங்களில் பிள்ளைகளோடே உலாவி மீன்களைப் பிடிப்பார்கள். அவர்கள் குடியிருப்பில் தங்கினால், குற்றாத கொழியலரிசியைக் களியாகத் துழாவியட்ட கூழை, அகன்ற வாயையுடைய தட்டுப்பிழாவிலே உலரவாற்றிப் பாம்பு கிடக்கின்ற புற்றாம் பழஞ்சோற்றினை யொக்கும் புறத்தினையுடைய முளையினை யிடித்துச் சேர அதிலே கலந்து சாடியின் கண்ணே முற்றியதும், விரலாலே அலைத்து அரிக்குந் தன்மையையுடையது மாகிய வெவ்விய கள்ளை மீன்சூட்டுடன் பெறுவாய். நீர்த் துறையிலே விளையாடி மகளிர் போகட்டுப்போன குழையினை நீலநிறமுள்ள சிச்சிலிப்பறவை தனக்கு இரையென எடுத்துக்கொண்டு பட்சிகள் நிறைந்திருக்கும் பனையிற் போகாது அந்தணர் யாகசாலையில் நட்ட யூபத்தின்மேலிருக்கும். அது சோனகர் பாய்மரத்தின் மேலேற்றிய அன்னவிளக்கைப் போலவும விடிவெள்ளி போலவும் ஒளி விட்டுத் தோன்றும்.
     கடற்கரை, மேற்றிசைக்கண்ணுள்ள குதிரைகளையும் வடதிசைக்கண்ணுள்ள பொருட்களையும் கொண்டு வந்து தரும் மரக்கலங்கள் சூழப்பெற்றது. மணல் மிகுந்த தெருக்களில் தொழிலாளராற் காக்கப்படும் பண்டகசாலைகளும், பரதவர் வாழும் வானளாவிய மாளிகைகளும் உண்டு, வீடுகளில் விளைபொருட்கள் தேங்கிக்கிடக்கும். உழுகின்ற எருதுகளுடன் பசுக்கள் நெருங்காதபடி ஆட்டுக் கிடாய்களும் நாய்களும் சுழன்று திரியும். உயர்ந்த மாடத்துறையும் பேரணிகலன்களையுடைய மகளிர் பசிய மணிகள் கோத்த வடங்களையுடைய அல்குலினிடத்தே கிடக்