கின்ற மெல்லிய துகிலசைய, மலையிலே ஆரவாரிக்கின்ற தோகைமயில் போல் உலாவுவார்கள், காலிடத்தேயுள்ள பொற்சிலம்புகள் ஒலிக்க, நூலினால் வரிந்து செய்யப்பட்ட பந்தினை அடித்து விளையாடுவார்கள். முத்தை யொத்த வார்ந்த மணலில் மெத்தென மெத்தெனக் கையிற் றரித்த வளைகள் அசையும்படியாகப் பொற்கழங்கு கொண்டு விளையாடுவார்கள். | கள்ளுண்பார் பலரும் புகுகின்ற வாயிலில் பசிய கொடிகள் அசையும்படி கட்டப்பட்டுள்ளன. முற்றத்திலே தெய்வத்துக்குத் தூவின சிவந்த பூவாடல்கள் கிடக்கும். அங்கே கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிய நீர் வடிதலின் நிலஞ் சேறாயிருக்கும். அச்சேற்றில் புரளுகின்ற பெண் பன்றியுடனே புணர்ச்சிக் கருத்தால் போகாமல் குழியிலே நிறுத்தி, நெல்லை இடித்த மாவாகிய உணவினால் ஆண் பன்றி வளர்க்கப்படுகிறது. இவ்வகையான பட்டினத்தில் தங்குவாயாயின் அப்பன்றியின் தசையோடு கள்ளை உண்ணும்படி பெறுவாய். துறைமுகத்தின் கண்ணே ஆகாயத்தை முட்டும்படி உயர்ந்ததும் கற்றை முதலியவற்றால் வேயாததுமாகிய கலங்கரை விளக்கம் உண்டு. இது மரக்கலங்கள் தாம் சேரும் இடத்தை யறிந்து செல்லும்படி நிறுவப்பட்டது. இதனைக் கடந்து சென்றால் தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள் காணப்படும். இவ்வகையான வீடுகளிலே தங்கினால் பலாப் பழத்தையும், இளநீரையும் வாழைப்பழத்தையும் பனையினது நுங்கோடே வேறு பண்டங்களையும் முற்றின வள்ளி முதலிய கிழங்குகளையும் உண்ணும்படி பெறுவாய். | அப்பால் சென்றால் காந்தள் வளருகின்ற மலையில் யானை படிந்தாற்போல, திருவெஃகாவில் பாம்பிலே துயில் கொள்ளும் திருமாலைக் காண்பாய். திருவெஃகாவைக் கடந்து சென்றால் காஞ்சிநகரை அடைவாய். அங்கே சோலைகளுள் பரிக்கோலைக் கையிலே உடைய யானைப்பாகர் சோர்ந்திருக்கும்போது யானைகளுக்கு நெய்யுடன் கலந்துவைக்கப்பட்ட அரிசியைச் சூலுடைய மந்தி திருடிக் | | |
|
|