கொண்டுசென்று உண்ணும். தேரோடுதலினால் தெருக்கள் தாழ்ந்திருக்கின்றன. |
கடவுள் உறைவதும் சீதேவி வாழ்வதுமாகிய அவ்வரசனின் வியனகரை யடைந்து, அவனைப் பல நன்மொழிகளாற் புகழ்ந்து யாழ் வாசிப்பின், அவன் அதனைக் கேட்டு மகிழ்ந்து உன்னுடைய அரையிற் கிடந்த கொட்டைப் பாசியின் வேரையொத்த கிழிந்த சீலையைப் போக்கிப், பாலாவியை யொத்த, விளங்குகின்ற நூலாற்செய்த துகில்களை உனது கரிய பெரிய சுற்றத்தாரோடே உடுக்கப் பண்ணி, வளைந்த அரிவாளைக்கொண்ட கையினையுடைய மடையன் ஆக்கின இறைச்சியிற், கொழுவிய தசைகளையும், செந்நெல் அரிசியாலாக்கிய சோற்றையும், இனிய சுவையுடைய கண்ட சருக்கரை முதலியவற்றுடனே ஊட்டி சிறியவும் பெரியவுமாகிய வெள்ளிக் கலங்களை உங்கள் பிள்ளைகளுக்கிடையே பரப்பி, தான் ஆசையுடனே அவர்களை உணணப்பண்ணி, பொற்றாமரையை நீண்ட மயிரிடத்தே அழகுபெறச் சொருகி, நான்கு குதிரைகள் பூட்டிய தேரையும் பசிய பொன்னாற் செய்த சேணத்தையும் பரிசிலாகத் தருவான். |
26. சில முக்கிய காலக் குறிப்புகள் |
1. தமிழ்நாட்டுத் தொடர்புடையவை |
கி,மு. 450 | ...வடிம்பலம்ப நின்ற பாண்டியன் |
கி.மு. 350 | ...நிலந்தரு திருவிற் பாண்டியன் |
கி.மு. 232-கி.மு. 184 | ...தமிழ்நாட்டில் மோரியர்(மயூரர்) |
கி.மு. 25 | ...பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (ஆகஸ்டஸ் சீசருக்குத் தூதனுப்பிய பாண்டியன் இவனாகலாம்) |
கி.பி. 17 | ...பரிபாடல் (சோதிடக்குறிப்பின்படி) |
கி.மு. 300-கி.பி. 100 | ...திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகையிற் பெரும்பாலன |