பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்215

கி.பி. 125(கி.பி. 50 வரையில்
எனக் கொள்வாருமுளர்)
...உக்கிரப்பெருவழுதி
கி.பி. 150 ...நெடுஞ்செழியன்
கி.பி. 175 ...வெற்றிவேல் இளஞ்செழியன்
கி.பி. 171-200 ...சிலப்பதிகாரம் மணிமேகலை
கி.பி. 3 ஆம் நூற்றாண்டு ...மாணிக்கவாசகர்(இவர் சுந்தரருக்குப் பின் 9 ஆம் நூற்றாண்டில் அல்லது 10ஆம் நூற்றாண்டில் விளங்கியவரெனக் கூறுவாரு முளர். தேவாரம் பாடியவர்கள் சிற்சில விடங்களில் மாணிக்க வாசகர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலைக் குறிப்பிடுகின்றமையின் அவர் தேவாரம் பாடியவர்களுக்குப் பிந்திய வரல்லர். இதுவே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் கருத்துமாகும்.) டாக்டர் சாமிநாதையர், பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார், இராமசந்திர தீட்சிதர் முதலியோரும் இவர் தேவாரம் பாடியவர்களுக்கு முற்பட்டவர் என்னுங் கருத்துடையர்.
கி.பி. 200-575 ...களப்பிரர்காலம்
கி.பி. 250 ...சேரன் செங்குட்டுவன்
கி.பி. 250-500 ...பழந்தமிழ்ப் பாக்கள் தொகுத்து முடிந்தது
கி.பி. 470 ...வச்சிரநந்தி (தமிழ்ச்சங்கம்)
கி.பி. 615-900 ...நாலாயிரப் பிரபந்தம்
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ...புறப்பொருள் வெண்பாமாலை
கி.பி. 7 ஆம் ழு ...சங்கராச்சாரியர்
கி.பி. 735 ...அரிகேசரி பராங்குசன்
கி.பி. 7 ஆம் ழு ...சம்பந்தர்
கி.பி. 7 ஆம் ழு ...திருநாவுக்கரசர்
கி.பி. 7 ஆம் ழு ...காளிதாசன்
கி.பி. 750 ...நாலடியார்
கி்.பி. 825-850 ...சேரமான் பெருமாணாயனார்
கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு ,,,ஆழ்வார்