4. ஒழிபியல் |
1, நால்வகை எழுத்து |
"சீன பாஷையில் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் கருத்தைக் குறிப்பதாய் இன்றளவும் பல்லாயிரம் எழுத்துக்களை உடைய பாஷையாயிருக்கிறது. தமிழ்மொழி எழுத்துக்களின் ஆதி சரிதமும், அவ்வாறே. அவ்வாறெனக் காட்டு முறைகள் பல தமிழ்ப் பூர்வ இலக்கணங்களுட் காணலாம். யாப்பருங்கல விருத்தியில் `தேர்பத முதலிய நால்வகையெழுத்து, உக்கிரவெழுத்து, முத்திறவெழுத்து, கதியெழுத்து, யோனியெழுத்து சங்கேதவெழுத்து, முதலியனவாய்ப் பலவித எழுத்துக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. |
திவாகரம் பிங்கலந்தை முதலிய நூல்களில்:- |
`பெயரெழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை எழுத்தென வெழுத்தின் பெயரியம் பினரேழு (திவாகரம்) |
`வடிவு பெயர் தண்மையுண் முடிவு நான்கா நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே.ழு | (இலக். கொத்) | |
`உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய............ழு | (இலக். கொத்) | |
இவற்றுள் `வடிவெழுத் தென்றது சித்திரக்குறிகளையாம். மனிதனை மனிதனின் உருவத்தையேனும் அவனின் பாகமாகிய தலையையேனும் சித்திரித்துக் காட்டல் பெயரெழுத் தென்றது சங்கேதக்குறி. போரைக் குறிக்க மனிதனின் புயங்களைக் காட்டுவது. தன்மை யெழுத்தென்றது குணம், சத்தி முதலியவற்றைக் காட்ட வரையும் அடையாளங்கள். விவேகத்துக்குக் கண், வெற்றிக்குக் கருடன் முதலியன வரைதல். முடிவெழுத் தென்றது வினை நிகழ்ச்சியை |