பக்கம் எண் :

220தமிழகம்

உணர்த்தும் வாக்கியங்களைக் குறிக்க வழங்கிய வாக்கியங்கள்ழு என்றார் செந்தமிழ்ப் பத்திராசிரியராகிய திரு. மு. இராகவ ஐயங்காரவர்கள். தமிழில் ஆராய்ச்சி மிக்குடையராய்த் `திராவிட விவகாரத்தில் தெளிந்த சில விஷயங்கள்ழு என்னும் வியாசமெழுதிய எப். ஜெ. ரிச்சர்ட்ஸ் பண்டிதர், `ஆதித்தமிழ் எழுத்து சித்திர வுருவமாகவே உண்டாயிருக்கவேண்டும்ழு எனக் கூறி, அதற்குச் சார்பாகப் பல்லாரியில் மயில் மலையில் பொறித்திருக்கும் சில சித்திரங்களையும் படம்பிடித்து அச்சேற்றி வெளியிட்டனர்."

(தமிழ் இலக்கியம் ப. 18-19)

2. மடலேறல்

     "மடலேறலாவது, ஒருவன் ஒவ்வாக் காமத்தால் பனங் கருக்காற் குதிரையும், பனந்தருவி னுள்ளனவற்றால் வண்டில் முதலானவுஞ் செய்து அக் குதிரையின்மே லேறுவது மடலேறுவான் திகம்பரனாய் உடலெங்கும் நீறுபூசிக் கிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டிக் கிழியின் தலைப்புறத்தில் அவன் பெயரை வரைந்து கைப்பிடித்து, ஊர் நடுவே நாற்சந்தியில் ஆகார நித்திரையின்றி, அக்கிழிமேற் பார்வையுஞ்சிந்தையு மிருத்தி, வேட்கை வயத்தனாய் வேறுணர்வின்றி, ஆவூரினும், அழல் மேற்படினும் அறிதலின்றி, மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவ்வூரினுள்ளார் பலருங் கூடி வந்து நீ மடலேறுதியோ? அவளைத் தருதும், சோதனை தருதியோ? என்றவழி, இயைந்தானாயின், அரசனுக் கறிவித்து, அவனேவலால் அவன் இனைந்து நையத்தந்து மடலேறென்றவழி, ஏறு முறைமை-பூளை யெலும்பு எருக்கு இவைகளாற் கட்டிய மாலையணிந்து கொண்டு அம்மாவிலேற, அவ்வடத்தை வீதியி லீர்த்தலும், அவ்வுருளை யுருண்டோடும் பொழுது, பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தந் தோன்றாது வீரியந்தோன்றின், அப்பொழுது அவளை அலங்கரித்துக் கொடுப்பது. இரத்தங் கண்டுழி, அவனைக் கொலை செய்து விடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கென் றுணர்க."

(தஞ். கோவை-உரை)