பக்கம் எண் :

ஒழிபியல்221

"மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்வும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.

(குறுந்-17)

"விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி
யொருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவி னியலவுந் தருவது கொல்லோ
கலிங்கவி ரசைநடைப் பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே."

 (ஷ-132)

"சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகி ழெருக்கங் கண்ணி சூடி
யுண்ணா நன்மாப் பண்ணி யெம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்."

(நற்றிணை-220)

கிராம பரிபாலனம்

     "செங்கற்பட்டுச் சில்லாவில், உத்தரமல்லூரில், வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் கி.பி. பத்தாவது நுற்றாண்டின் தொடக்கத்தில் பரகேசரிவர்மன் என்ற சோழன் ஏற்படுத்திய ஒரு சிலாசாசனத்தில், உத்தரமல்லூரைச் சேர்ந்த கிராமபரிபாலன விதிகளைச் சீர்திருத்திய விபரம் கண்டிருக்கிறது, அதில் சபையாரை நியமித்தலான ஒழுங்கு விளக்கியிருக்கிறது. பெரியரும் சிறியருமான கிராமவாசிகள் ஓரிடத்தில் கூட்டங் கூடவேண்டும். ஆலயங்களின் அர்ச்சகர்கள் யாவரும் கூட்டத்தில் வந்திருக்க வேண்டும், சபையாக நியமிக்கத்தக்கவர்கள் பெயர்களை ஒவ்வொரு ஓலைநறுக்கில் எழுதி அந்தந்த நத்தம் வாரியாகத் தனித்தனிக் கட்டுகளாகக் கட்டி வைக்கவேண்டும். அர்ச்சகர்களில் வயது முதிர்ந்தோர் வெறுங்குட மொன்றைக் கையிலெடுத்துக்கொண்டு கூட்டத்தின் மத்தியில் நிற்கவேண்டும். ஓலைக் கட்டுகளை ஒவ்வொன்றாகக்