பக்கம் எண் :

222தமிழகம்

குடத்தைக் குலுக்கி ஒன்று மறியாத ஒரு சிறுவனை அழைத்துக் குடத்தில் கையிட்டு ஒரு நறுக்கை எடுக்கச் செய்து, அதை மத்தியத்தர் கையிற் கொடுக்கவேண்டும். அந்த நறுக்கிலுள்ள பெயரை மத்தியத்தர் வாசித்தபிறகு மற்ற அர்ச்சகர்கள் ஒவ்வொருவரும் வாசித்துக் காட்டவேண்டும். அதன்மேல் அந்தந்தப் பெயர் எல்லாருக்கும் அங்கீகாரமாகும். இங்ஙனம் நத்தத்துக்கொவ்வொருவராகக் கிராமபரிபாலன மகாசபை ஏற்படுத்துவதென்று மேற்படி சாசனத்தில் கண்டிருக்கிறது."

(செல்வக்கேசவராய முதலியார்.)

     1ஒரு பொன் எனப்பட்ட தங்க நாணயம் இரண்டரை வெள்ளி நாணயம் (ரூபா) பெறுமதியுள்ளது.

-தமிழாராய்ச்சி. (ப-260)

3. சங்க நூல்கள்

     பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க் கணக்கு முதலியன சங்க நூல்களென வழங்கப்படுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள நூல்களுட் பெரும்பாலன சங்ககாலத்துக்குப் பிற்பட்டன.
"முருகுபொரு நாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
     திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டில் அடங்கிய நூல்களாகும்:-

     1, Pon, a gold coin valued at Rs. 2-8-0 each (Tamil Studies P. 260.)