பக்கம் எண் :

ஒழிபியல்223

எட்டுத்தொகையில் அடங்கிய நூல்கள்:
"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் போற்றுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை."
     புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு குறுந்தொகை என்பனவாம்.

1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி-மாமூல
மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."
     நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை, திருக்குறள் என்பனவாம்.
     கடைசியிற் கூறப்பட்ட ஆறு நூல்களைப் பற்றிப் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன.
     "கடைச்சங்க நூல்களில் பெயர் வழங்கும் புலவர் கிட்டத்தட்ட ஐந்நூற்றுவர் எனக் கூறப்பட்டது. இவருள் பெரும்பாலார் இன்னாரென அறிதற்கிடமில்லை. ஒருவாறு இன்னாரென அறியக் கிடந்தவர் இருநூறு புலவரே. இவருள் வேளாளர் ஐம்பத்தொருவர், பெண்பாலார் முப்பத்தறுவர், அந்தணர் இருபத்தொன்பதின்மர், நாகர் பதினெழுவர், எயினர் பதின்மூவர், கம்மாளர் எழுவர், வணிகர் எழுவர், மன்னர் ஐவர், ஆயர் மூவர், குயவர் ஒருவர், பரதவர் ஒருவர், வள்ளுவர் ஒருவர், பாண்டிய