பக்கம் எண் :

224தமிழகம்

மன்னர் பதின்மூவர், சேரமன்னர் எழுவர், சோழமன்னர் ஒருவர், தொண்டைமான் ஒருவர்.

(தமிழ் இலக். ப 66)

2. ஐம்பெருங் காப்பியங்கள்

     சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி.

3. ஐஞ்சிறு காப்பியங்கள்

     சூளாமணி, உதயணன்கதை, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம்.

4. திருக்குறள்

     திருக்குறள் உக்கிரப்பெருவழுதி காலத்தில் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட தென்பது கன்ன பரம்பரைக் கதை. இலங்கையை யாண்ட ஏல்லாளன்(ஏலேல சிங்கன்) காலத்தவர் இவர் எனச் சிலர் கூறுவர். அப்படியாயின் அவர் காலம் கி.மு. 204 ஆகும். திருவள்ளுவர் செய்துள்ள நூல் எல்லாச் சமயத்தாராலும் எச்சாதியாராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவள்ளுவர் தமது நூலிற் கூறியுள்ள சமயமே தமிழர்கள் சமயம் என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர். திருவள்ளுவர், மனுநூலிலோ சாணக்கியர் செய்த அர்த்தசாத்திரத்திலோ விருந்து தமது நூலுக்கு வேண்டிய ஆதாரங்களைப் பெற்றார் என்று ஒரு சிலரும், அற்றன்று, ஷ நூல்களிலுள்ள பலவற்றையே மொழிபெயர்த்துள்ளாரென்று வேறு சிலரும் கூறுவர். சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடலியர்) அருத்த சாத்திரம், காமசாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம் முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ் நாட்டில்