அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவி வழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர் திருவள்ளுவர் என்னும் இருவர் நூல்களிலும் ஓரோ ரிடங்களில் ஒருமைப்பாடு காணப்படுதல் சகசமே. ஆகவே, வள்ளுவர் சாணக்கியர் நூலிலிருந்து சிலவற்றை எடுத்து மொழிபெயர்த்துக் கொண்டார் எனக் கூறுதல் இயைபுடையதாகாது. மனுநூலுக்கும் திருக்குறளுக்கும் உள்ள வித்தியாசம் அணுவுக்கும் மாமேருவுக்கும் உள்ளதாகும். இதன் வேற்றுமையை ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், "வள்ளுவர்செய் திருக்குறளை வழுவறநன் குணர்ந்தோர்கள்-உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி" என்று நனி விளக்கியுள்ளார். விளையாட்டுச் சிறாரால் மணலிற் கீறப்பட்ட கோடுகளிலும், நத்தை ஓட்டிலுள்ள கீறுகளிலும் ஓரோவிடத்து அகர வடிவம் காணப்படுவதுபோல மனுநூலிலுள்ள ஏதோ ஒரு வாக்கியம் திருக்குறளிலுள்ள யாதானுமொரு பொருளோடு ஒற்றுமைப்படுமாயின், முன்னதின் மொழிபெயர்ப்பே பின்னது என்று வாதாடுதல் அபிமானம் பற்றியதாகும். | 5. திருவள்ளுவமாலை | திருவள்ளுவரையும் அவர் நூலையும் சிறப்பித்துப் பாடப்பட்ட வெண்பாக்கள் திருவள்ளுவமாலை என வழங்கும். இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் யாரோ ஒரு புலவரால் பாடப்பட்டதெனச் சில அறிஞர் அபிப்பிராயப்படுகின்றனர். | "திருவள்ளுவமாலை செய்தது குறள் அரங்கேற்றிய காலத்தென்றாவது, அதில் நாமகள் இறையனார் முதலியவர்கள்பாடியனவாகக் காணப்படும் செய்யுள்கள், மெய்ம் | | |
|
|