பக்கம் எண் :

226தமிழகம்

மையாக அவர்களாற் பாடப்பட்டன வென்றாவது கொள்ளற்கிடமின்மையால், மேற்கூறிய மாமூலனார் பாட்டென்பது வள்ளுவரை இழிகுலத்தா னென்பதற்குத் தக்க ஆதாரமாகாது. திருவள்ளுவமாலை செய்தது குறள் அரங்கேற்றிய காலத் தன்றென்பதற்குக் காரணம் என்ன என்பீராயின், அசரீரியும், நாமகளும் பாட்டுப் பாடுவது அனுபவ விரோதமும் அசம்பாவித முமேயாம். மற்றையோர்களாற் பாடப்பட்டனவாகக் காணப்படும் பாட்டுக்களுட் பெரும்பாலன மெய்யாக அவர்களாற் பாடப்பட்டனவல்ல. எங்ஙனமெனின், ஒரு நூலுக்குப் பாயிரஞ் சொல்லவோ அன்றி அதனை எடுத்துப் புகழவோ புக்கார் அந்நூன் முழுவதையும் பற்றிப்பேசுவரேயன்றி, அதன் ஒரு பாகத்தை மாத்திரம் பேசார். திருவள்ளுவமாலையிலோ அறத்துப் பாலைப்பற்றி,
"பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா யாய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து"
     என்று எறிச்சலூர் மலாடனாரும், பொருட்பாலைப்பற்றி,
"அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூழ்-இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை"
     என்று போக்கியாரும், காமத்துப் பாலைப்பற்றி,
"ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக-மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு"
     என்று மோசிகீரனாரும் கூறினதாக வருகின்றது. இம்மூன்று பாடலும் குறளிலுள்ள ஒவ்வோரியலின் தொகையையும் அதிகாரத்தின் தொகையையும் கூறுகின்றன வன்