றிக் குறளின் சிறப்பை அல்லது அதன் அருமை பெருமைகளை எடுத்துரைக்கவில்லை, அன்றிச் செய்யுளழகு வாய்ந் தனவாயுமில்லை. இவைகளை இயற்றுவதற்கு மூன்று சங்கப் புலவர்கள் வேண்டியதில்லை, காரிகை கற்றுக் கவிபாடும் ஒருவர் போதும். இங்ஙனமே இவை மூன்றும் குறளின் இயலும் அதிகாரமும் இத்தனையென்று கணக்கிட விரும்பிய ஒருவராலேயே இயற்றப்பட்டனவாதல் வேண்டும். | திருவள்ளுவமாலை குறள் அரங்கேற்றப்பட்ட காலத்துச் செய்யப்படவில்லை என்பதற்கு மற்றொரு நியாயமும் கூறுதும். அம் மாலையில் உக்கிரப்பெருவழுதியார் பாடினதாக வரும் செய்யுளில் `நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்ழு என்றும், காவிரிப்பூம்பட்டினத்துக் கார்க்கண்ணனார் பெயர் கொண்ட செய்யுளில், `ஐயாறு நூறு மதிகார மூன்றுமா, மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது, தந்தானுலகுக்குத் தான் வள்ளுவனாகி, அந்தா மரைமே லயன்ழு என்றும் வள்ளுவரைப் பிரமதேவனின் அவதாரமாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வள்ளுவரைப் பிரமதேவனின் அவதாரமாகக் கூறவந்தது அவர் உயிரோடிருந்தபோதன்று. உயிரோடிருக்கும்போதே ஒருவரைக் கடவுளின் அவதாரமாகக் கொண்டாடுவது எங்குமில்லை. ஒருவர் இறந்தபின் பல வருடங்கள் சென்று காலம் நீடிக்க நீடிக்கத்தான் அவருடைய பெருமை வளர்ச்சியுற்றுத் தெய்வ தன்மையடையும். அப்போதுதான் அவர் கடவுளின் அவதாரமாகக் கருதப்படுவார். அங்ஙனமே வள்ளுவரின் அறிவின் பெருமையைக் கண்டு அவரை ஒரு கடவுளின் அவதாரமாகக் கொண்டாடவந்தது அவர் குறளியற்றிப் பல வருடங்கள் சென்றபின்பேயாம். அப்படிச் சிறிது காலஞ்சென்று வள்ளுவர் பிரமதேவனுடைய அவதாரமென்ற கொள்கை வேரூன்றியதன் பின்னரே இந்தப் பாட்டுக்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் இப்பாடல்கள் பாடப்பட்டது குறள் இயற்றிய வெகு காலத்துக்குப் பின் | | |
|
|