பக்கம் எண் :

ஒழிபியல்229

என அசரீரி சொன்னதாக மற்றொருவரால் பாடப்பட்டிருத்தலும் இந்தக் கொள்கைக்குத் தகுந்த துணையாகும்.
     இன்னும் இந்தப் பாட்டு மதுரையில் தெய்வத்தன்மை பொருந்திய சங்கப்பலகை ஒன்றிருந்ததென்பதைக் குறித்தலினாலும், அந்தப் பலகையில் திருவள்ளுவரோ டொக்க விருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவரென்பதனால், குறளரங்கேற்றிய காலத்தில் சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோ டொக்கவிருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரை வாவியுள் வீழ்ந்து மூழ்கினரென்னுங் கதைக்குத் தோற்றுமிடமா யிருத்தலினாலும், இது குறள் தோன்றி வெகு காலத்துக்குப்பின் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பது தேற்றம். சங்கப் பலகையிலேற்றிய இந்தக் கதை கட்டுக்கதை. இதுபோன்றதொரு கதை சடகோப ரியற்றிய திருவாய்மொழியைப்பற்றியும் வழங்குகின்றது."

(திருக்கோணமலை வித்துவசிரோமணி,
த. கனகசுந்தரம் பிள்ளை பி.ஏ.,)

     (திருக்கோணமலை வித்துவசிரோமணி, த. கனகசுந்தரம் பிள்ளை பி.ஏ.,)
1திருவள்ளுவமாலை என்னும் நூல் சந்தேகத்துக்குரிய கதைகளும் கற்பனைகளும் நிறைந்த பாடல்கள் அடங்கியது. இப்பாடல்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டளவில் திருவள்ளுவர் நூலைச் சிறப்பிக்க யாரோ ஒரு தமிழ்ப்புலவரால் பாடப்பட்டிருத்தல் வேண்டும்.

-தமிழாராய்ச்சி ப. 247

4. மகளிரைச் சிறைபிடித்தல்

     முன்னாளில் ஓர் அரசன் பிறனோர் அரசனோடு பொருதுவென்றால், அவன் நாட்டிலுள்ள மகளிரைச் சிறை

     1. "Thiruvalluvamalai or the garland of Thiruvalluvar like every other account relating to this famous moralist is a strange mixture of doubtful traditions and absurd fictions written by some later Dravidian author of the 9th century to popularize the celebrated work to Thiruvalluvar."

 (Tamil Studies p.247)