பக்கம் எண் :

230தமிழகம்

பிடித்துவந்து அவரைக் கற்பழித்தும் மானபங்கஞ்செய்தும் வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களில் கடவுளைத் தொழுதுகொண்டு அங்குக் கடவுட்டிருப்பணி செய்யும் படி இருத்துவான்.

5. கடற்போர்

     சேரலாதன் கடலிடத்தே தீவொன்றில் வசித்த தன் பகைவர்மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவல் மரமான கடம்பை வெட்டி யெறிந்து, அவனைப் போர் தொலைத்தான். இவ்வரலாறு பதிற்றுப்பத்தில் கூறப்படுகின்றது.

6. தமிழரசர் மாலைகள்

     பாண்டியன்-வேம்பு, சேரன்-பனை, சோழன்-ஆத்தி, "போந்தை வேம்பே ஆரெனவரூஉம் மாபெருந்தானையர்" (தொல்,)

7. படைகளின் அணிவகுப்பு முதலியன

     அணி, உண்டை, ஓட்டு, ஆக்கம், கொடிப்படை, தார், தூசி, நிறை, கூழை.

8. அகழிகள்

     சில அகழிகள் 40 அடித் தாழ்வு இருந்தன. கி.பி. 781இலும் 977இலும் எழுதப்பட்ட சில சிலாசாசனங்கள் இதைக் குறிப்பிடுகின்றன.

-(Studies in Tamil Literature and History, p.23)

9. போர்முரசு

     செங்குட்டுவன் கனகவிசயருடன் யுத்தத்துக்கு புறப்பட்டபோது கொடும்பறை, நெடுவயிர், முரசம் பாண்டில், மயிர்க்கண் முரசம் முதலியன ஒலிக்கப்பட்டன என்று சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது.