"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்." | (குறள்-550) | |
13. கிராமச் சங்கம் |
கிராம காரியங்களை வயதின் முதியவர்கள் ஊர் நடுவிலுள்ள மரங்களின் கீழ்க் கூடி முடிவு செய்தார்கள். அங்ஙனம் கூடும் சங்கம் மன்றம் அல்லது பொதியில் என்று அறியப்பட்டது. இம்மன்றங்கள் பெரும்பாலும், ஆல், விளா, பலா, வேம்பு முதலிய மரங்களின் கீழ்க் கூடின. மரத்தைச் சூழ்ந்து நாற்புறமும் திண்ணை அமைக்கப்பட்டிருந்தது. |
14. துறவிகள் தோற்றம் |
மரவுரியை உடையாகச் செய்த உடையினர். அழகாலும் வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச்சங்கை யொக்கும் நரைமுடியினர். எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கில்லாமல் விளங்கும் மேனியர். அடிக்கடி விரதமிருந்து பட்டினி கிடப்பதால் தசையில்லாத மார்பின் எலும்புகளின் கோவை வெளிப்படத் தோன்றி உலவும் உடம்பினை யுடையவர். எப்பொருளும் நுகர்வதற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பல சேரக்கழிந்த வுணவினையுடையார். நெடுங்காலம் மனத்தில் தங்கக்கூடிய கோபத்தைப் போக்கிய மனத்தினர். பலவற்றையும் கற்ற பெரும் கல்விமான்களும் சிறிதும் அறிய மாட்டாத இயல்பான அறிவுடையவர். பலவற்றையும் கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையை யுடையவர். ஆசையோடே கடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையவர். தவத்தால் உடலுக்கு வருத்தம் இருப்பது உண்மையெனினும் தங்கள் மனத்தினால் வருத்தம் சிறிது மறியப்படாத இயல்பினையுடையவர். (திருமுருகாற்றுப்படை) |
15. மகளிர் அழகு |
ஒரு பாடினியின் அழகின் விபரம் பொருநராற்றுப் படையில் கூறப்படுகின்றது. அது வருமாறு :- கூந்தல் |