வார்ந்த ஆற்றின் கருமணல் போன்றது, நெற்றி பிறை போன்றது, புருவம் விற்போன்றது, குளிர்ச்சி பொருந்திய கண் அழகிய கடையையுடையது, வாய் இலவிதழ் போன்றது, பற்கள் வெள்ளிய முத்துக்கள் போன்றன, காதுகள் கத்திரிகை போன்றன, அவை மகரக்குழை அணியப்பெற்று அசையுந் தன்மையுடையன, தோள்கள் மூங்கில் போற் பெருமையுடையன, முன்கைகள் ஐதாகிய மயிரினையுடையன, விரல்கள் காந்தள்மலர் போன்றன, நகங்கள் கிளியினது வாய் போன்றன, முலைகள் ஈர்க்கிடைபோகாது பணைத்தன, கொப்பூழ் நீர்ச்சுழி போன்றது, இடை சிறுமையை யுடையது, அல்குல் பல மணி கோத்த மேகலை அணியப்பட்டது, குறங்கு பிடியினது கைபோன்றது, அடிகள் ஓடி இளைத்த நாயினது நாக்குப் போன்றன, கொண்டை வாழைப்பூப் போன்றது. | 16. தமிழர் வியாபாரம் | 1பழைய தமிழ் இலக்கியங்களும் கிரேக்க உரோமன் நூலாசிரியர்களும் கிறித்து முன்னிரண்டு நூற்றாண்டுகளிலும் சோழ இராச்சியத்தைச் சேர்ந்த கிழக்குக்கரை கிழக்குத் தேசங்களோடும் மேற்குத் தேசங்களோடும் பெரிய வர்த்தகம் நடத்துவதற் கிடனாயிருந்தது. சோழ தேசக் கடலோடிகள் கரையோரங்களில் மாத்திரம் பிரயாணஞ் செய்தாரல்லர். அவர்கள் வங்காளக் குடாக்குடலைக் கடந்து கங்காநதி ஐராவதி முகத்துவாரங்களுக்குச் சென்றார்கள், இந்து சமுத்திரத்தைக் கடந்து மலாய்த் தீவுகச் கூட்டங்களை அடைந்தார்கள். (வின்சென்ட் சிமித்) |
| 1. "Ancient Tamil literature and the Greek and Roman authors prove that in the first two centuries of the Christain era the ports of the Coromandal or Chola Coast enjoyed the benefits of active commerce with both the West and the East. The Chola fleets did not confine themselves to coasting Voyages, but boldly crossed to Bay of Bengal to the mouths of the Ganges and Irrawaddy and the Indian ocean to the Islands of Malay Archipelago." (Vincent Smith) | | |
|
|