பக்கம் எண் :

234தமிழகம்

17. நகர் காவலர்

     இவர் புலிபோலுநர், துயில்கொள்ளாத கண்ணர். அஞ்சாநெஞ்சர். களவுதொழில் தந்திரங்களைக் கண்டறியும் நுண்ணிய அறிவினர். குறிதப்பா அம்பினர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்தோடும் காரிருள் கவிந்த யாமங்களிலும் இவர் இளைப்பின்றி ஊர் சுற்றிவருவார். கறுத்த உடலினராய்க் கருஞ்சேலை யுடுத்து வாள் கைக் கொண்டு மென்னூலேணி அரையிற் சுற்றி விழித்த கண் இமைக்கு முன் மறைந்தோடும் வலியுடைய கள்வரையும் கடிதிற் பிடித்துக்கொணரும் ஆற்றலுடையவர்.

 (மதுரைக்காஞ்சி)

18. இன்ன புலவர் இன்ன பாவில்
திறமையுடையா ரென்பது

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்த மென்னும்
ஒண்பாவி லுயர்கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாய பகர்சந்தம் படிக்காச
லாதொருவர் பகரொணாதே."

19. தமிழ் ஆராய்ச்சி1 நூலிற் காணும்
சில குறிப்புக்கள்

     2ஆரியர் வருகைக்கு முன்னமேயே எழுத்துச் சுவடி முதலிய தமிழ்ச்சொற்கள் உண்மையால் அகத்தியர்

     1. Tamil Studies.
     2. The existence of pure Tamil words like எழுத்து, சுவடி etc., before they (Aryans) came to south disproves the theory Agastya brought the alphebet with him from Upper India. (p. 122.)