பக்கம் எண் :

ஒழிபியல்235

வடக்கிலிருந்து எழுத்தைக் கொண்டுவந்தார் என்பது உண்மையன்று.

-தமிழாராய்ச்சி பக்கம் 122.

     பயிர்த்தொழில், அங்கநூல், சிற்பக்கலை, கட்டடக் கலை, வானநூல், வாணிகம், வீட்டுப் பொருள்கள், உறவின் முறைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மொழி, இலக்கியம், மருந்து, உலோகங்கள், அரசியல், சமயம், யுத்தம், நிறை, அளவு முதலியவைகளும் பிறவுமாகியவற்றைப் புலப்படுத்தும் பழைய தமிழ்ச் சொற்களுண்டு.

20. ஏறு தழுவுதல்

     ஏறு தழுவுதல் ஆயருக்கே உரியதாயிருந்தது. பிறை போன்ற கோட்டினையுடைய ஏற்றின் வலியை அடக்கிய சிறுவருக்கு ஆயர் தம் மகளிரை வதுவை சூட்டினர். ஏறு தழுவுங்கால் அவ்வேறுகள் தங் கூர்ங்கோடுகளால் சிறுவர்களின் வயிற்றைப் பிளந்து அவரைக் கொல்வதுமுண்டு. இதன் விபரம் முல்லைக் கலியில் நன்கு கூறப்பட்டுள்ளது.


     "They had and still have their own terms pertaining to agriculture, anatomy architecture, astronomy, commerce, domestic economy, family relations, fauna and flora, language and literature, medicine, minerals, politics, religion, war, weight and measures, etc, all of course in their primitive stage. நாறு, செய், ஞாயிறு, திங்கள், கை, கால், மாறுகோள், நெல், பால், முற்றம், மச்சு, தாய், அப்பன், தெற்கு, தாழை, வலி, பூசை, எழுத்து, சொல், பா, திணை, நோ, வலி, வெள்ளி, பொன், இறை, ஊர், கடவுள், அம்பு, வில், மா, கழஞ்சு all pure Tamil words.

     "நாடு, கூற்றம், கோட்டம் as administrative divisions of a country, நெல்லாயம், கார்த்திகைப் பச்சை, கின்மை, தறியிறை, செக்கிறை, மகன்மை etc., as names of public taxes, அமாத்தியம், வாரியம், காவிதிமை, சம்பிரிதி etc, as official terms, குறுணி, பதக்கு, தூணி, முந்திரி, காணி, கழஞ்சு and other words of native weight and measures.......காசு, பணம், துட்டு, வராகன் and other denominations of old coinage."