"ஏறாகிய எருமையை யேறுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சை வடிம்பாலே பிளந்து போகட்டுச் சினத்தோடே அரிய உயிரை வாங்கின அஞ்ஞான்றை யிறைவன் இத்தன்மையை உடையவன்கொலென்று கூறும்படியாகக் காற்றின் விசை போல ஓடி வந்து விரைந்து ஏறாகிய காரியதனைப் பலரும் வந்து சேர்தலையுடைய களத்தே வலியடங்கத் தழுவி வருத்தி அதன் மேலே தோன்றி நின்ற பொதுவனது அழகைப் பாராய், அதனைக் கண்டு என் நெஞ்சு உட்கிற்றுக்கா ணென்றாள்." |