யும் கொடிய பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுமுடைய கூகையோடே கடிய பாம்பு தூங்குகையினாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், குறைபாடுடைய உடலினையும், கண்டார் அஞ்சும் நடையினையுமுடைய வெருவருந் தோற்றத்தையுடைய பேய்மகள் உதிரத்தை யளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி, உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை ஒளி பொருந்திய வளையலணிந்த கையிலே எடுத்து வெற்றிக்களத்தைப் பாடித் தோளையசைத்து, நிணத்தைத் தின்கின்ற வாயளாய்த் துணங்கைக் கூத்தாடுவாள். | 23. சில நம்பிக்கைகள் | காகங் கரைவது விருந்தினர் வருவதற்கறிகுறியெனக் கருதப்பட்டது. புட்கரைதல் அல்லது அவை பறக்குந் திசைகள் தாம் உன்னிச் செல்லும் கருமங்களுக்கு அநுகூலம் அல்லது பிரதிகூலம் ஏற்படுவதை உணர்த்தும் என நம்பப்பட்டது. தக்க பரிசில் பெறாவிடத்துப் புலவர்கள் புள்ளையும் பொழுதையும் பழிப்பார்கள் (புறம்-204), பேய்கள் மரங்களிலும் இடுகாடு சுடுகாடுகளிலும் உறையும். பேய்மகளிர் போர்க்களங்களிற் சென்று இறந்தவர்களின் காயங்களில் விரல்களை அளைந்து அவற்றால் தங்கள் தலையினைக் கோதிச் செந்நிறமாய் விளங்கினார்கள். அவர்கள் பிணங்களைத் தழுவிப் புலாலினைப் புசித்தார்கள். பேய்களை ஓட்டுவதற்கு வெண்கடுகைப் புகைப்பித்தல் முன்னுள்ளோர் வழக்கு. பேய்மகளிர் மனித நிணத்திலும் இரத்தத்திலும் விருப்புள்ளோராவர். ஆகவே, அவை புண்பட்ட போர்வீரரைச் சூழ்ந்து திரியும். அவை புண்ணைத் தீண்டினால் புண் ஆறாது. புண்பட்டோன் இறந்துவிடுவான். தனது கணவனின் புண்ணைப் பேய் தீண்டாதபடி அவனுடைய மனைவி வேப்பிலை இரவம் இலைகளை வீட்டின் இறப்பில் செருகி, யாழ் முதலிய இசைக்கருவிகளை ஒலிப்பித்து | | |
|
|