பக்கம் எண் :

ஒழிபியல்239

வெண்கடுகு சிதறி, காஞ்சிபாடி, வாசனைப் பொருட்களைப் புகைப்பிப்பாள்.
"தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
பையவி சிதறி யாம்ப லூதி
யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ"

 (புறம்-281)

24. தலைக்கோல்

     பொன் உறையிட்டு முத்துக்களும் நவமணிகளும் அழுத்தி அலங்கரிக்கப்பட்ட மூங்கிற்கோல் ஒன்று அரங்கின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. இம் மூங்கிற்கோல் பெரும்பாலும் பகை அரசனின் வெண்கொற்றக் குடையின் காம்பாக விருக்கும். அது அரண்மனையின் ஓர் அறையில் வணக்கத்துக்குரியதாக வைக்கப்படும். கூத்து நிகழும் நாளில் அது பொற்குடங்களில் நிறைக்கப்பட்ட நீரால் முழுக்காட்டியபின் பூமாலையாலும் முத்துமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுப், பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலஞ் செய்யப்பட்டு, அரங்கின் மத்தியில் நாட்டப்படும். ஆட்டந் தொடங்குமுன் கூத்தியர் தலைக்கோலை வணங்குதல் மரபு. தலைக்கோல் கூத்தியர்க்கு அளிக்கப்படும் பட்டமுமாம்.

25, பரத்தையர்

     பட்டினங்களில் பரத்தையர் சேரிகள் இருந்தன. கலித்தொகையினால் ஏனாதிப்பாடி என ஓரிடத்திற் கூறப்படுகின்றது. இது ஏனாதிப் பட்டம் பெற்றா னொருவன் ஏற்படுத்திய பரத்தையர் சேரியென அதனுரையால் விளங்குகின்றது. பரத்தையர் ஆடல்பாடல்களிற் சிறந்து கண்ணுக்கு மையெழுதிக் கண்டார் மயங்கும்படி தம்மை