26. சங்க நூல்களால் அறியும் தமிழர் நாகரிகம் | 1. பத்துப்பாட்டால் அறியப்படுவன | அறுகம்புல்லால் திரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது இறைச்சி, இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட இறைச்சி, பகலு மிரவும் இறைச்சியைத் தின்று பற்கள் முனை மழுங்குதல், நாலு குதிரைபூட்டிய தேர், ஏழடிபின் செல்லல், தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள், மீனினது நெய்யோடே நறவையும் கொண்டு போதல், வாழைப்பூவெனப் பொலிந்த வோதி, உமணரோடு வந்த மந்தி சிறு பிள்ளைகளோடு கிலுகிலு விளையாடுதல், அமிழ்துவிளை தீங்கனி யௌவைக்கீந்த அதிகன், அரவு வெகுண்டன்ன நறவு நல்கல், ஆய் பாம்பு கொடுத்த நீலப்பட்டாடையை ஆலமர் செல்வர்க்குக் கொடுத்தது, கற்றோய்த்துடுத்த படிவப்பார்ப்பான், பாவை விளக்கு, பெரிய கொடி பாய்மரத்திலே யாடுகின்ற மரக்கலம், புலி கூட்டிலே அடைக்கப்பட்டிருத்தல், மாறுபாட்டை யேற்றுக் கோறற்றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற் போர்த்த முரசம் ஒலித்தல், இலங்கு இழை மகளிர் பொலம்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்துண்டல், இரும்புசெய் விளக்கு, கஞ்சிதோய்த்த துகில், நடுநிசியில் வேப்பிலையைத் தலையிலே கட்டின வேலையுடைய வேந்தன் பாசறையிற் புண்பட்டோரைப் பரிகரித்தல், காரி உண்டிக்கடவுள். | 2. அகநானூற்றா லறியப்படுவன: | நடுகல் வழிபாடு, புலி, தான் கொன்ற யானை இடப்பக்கம் வீழ்ந்தால் மானத்தினால் அதனை உண்ணாமை, மகளிர் குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுத் தினை மேய வந்த யானை உறங்குவது, வேங்கைமலர் கொய்யும் மகளிர் புலி புலி என்ற ஒலியைக் கேட்டுப் புலியை ஓட்டுவதற்கு ஆடவர் வில்லுங் கொம்பும் எடுத்துக்கொண்டு வந்து புலியைக் காணாமல் வெள்கிப் போதல், தலைவன் பரத்தை | | |
|
|