பக்கம் எண் :

242தமிழகம்

யொடு காவிரியில் நீர் விளையாடுதல், கணவர் வரவைக் கருதிச் சுவரிற் கோடிட்டு நாள் எண்ணுதல், பெண் ஆமையீன்ற முட்டையை ஆண் ஆமை பாதுகாத்தல்.

3, குறுந்தொகையால் அறியப்படுவன

     ஆவின் கழுத்தில் மணி யணிதல், மகளிர் வண்ட லயர்தல், குறச்சிறார் குறி சொல்லுதல், சிறு பிள்ளைகள் சிறுதேருருட்டி விளையாடுதல், புலிப்பற்றாலி சிறார்க் கணிதல், பெண்கள் துணங்கைக்கூத் தாடுதல், வண்ணாத்தி கஞ்சிப் பசை போடுதல், விளையாட்டு மகளிர் மணல் வீடுகட்டுதல், நுளைச்சியர் நெல் பெற்று உப்புத் தருதல், பரதவர் கட்டு மரத்திலிருந்து மீன் பிடித்தல், அலவன் தனது பெடையை நீராட்டுதல், அன்றில் பனைமடலிற் கூடுகட்டுதல், குயில் மூங்கிலிற் றங்குதல், சூல்மகளிர் புளிப்பை விரும்புதல், வாளைமீனுக்குக் கொம்பிருத்தல், கிளி வேப்பம்பழத்தைக் கவ்வுதல், யானை தனக்குச் செய்த தீங்கை மறவாமை, யானை வாழைத்தண்டால் மதமழிதல், துயரால் வருங்கண்ணீர் வெப்பமாதல்.

4, நற்றிணையா லறியப்படுவன

     காதலி சுவரிலே கோடிட்டுப் பிரிந்த தலைமகன் வருநாள் எண்ணுதல், காலாற் பந்து விளையாடுதல், காதலன் வரவைப் பல்லி கூறுதல், இரும்பு காய்ச்சிய உலையிலே கொல்லன் பனைமடலிலுள்ள நீர் தெளித்து நெருப்பை அணைத்தல், எருமை மேய்ப்பான் அதன்மேல் ஏறிச் செல்லல்.

5, கலித்தொகையி்ற் காணப்படும் செய்திகள்:

     முக்கண்ணான் மூவெயிலை எரித்தது(பாலை-2), `எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ, லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு, நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக், குறிப்பேவல் செயன்மாலைக்