பக்கம் எண் :

244தமிழகம்

6. சிந்தாமணியிற் காணப்படும் பழைய செய்திகள்:
     அருந்ததி காட்டல் (2669), ஆவியன்ன துகில் (67), எலிமயிர்ப்போர்வை (2680), ஏனாதி மோதிரஞ் செறித்த சேனாதிபதி (2167), கல்லூரி (395), குதிரைகளின் துடைகளில் அவை பிறந்த இடப் பெயரை எழுதுதல் (2215), யானையரசின் வலமருப் பீர்ந்து செய்த சீப்பு (2436), முழந்தாளளவாக வீர ருடுக்கு முடை (468), வலம்புரி வடிவச் செப்பு (2475), பொன்செய்நாணிற் குஞ்சியைக் கட்டுதல் (2288).
7. பரிபாடலில் காணப்படுஞ் செய்திகள்:
     இந்திரன் சாபமேற்றது (19), இம்மையின்பங் குறித்துக் கன்னியர் தைந்நீராடல் (11), இராகுகேதுகள் காணப்படுவன வல்ல வென்பது (12), இளைய மகளிருடைய அழுகை தீர்த்தற்குத் தாயர் புலி புலி யென்று அச்சுறுத்தல்(14), நகத்திலும் கன்னத்திலும் செம்பஞ்சு எழுதுதல்(6), பழந்தேனாற் செய்த தேறல்(16), புண்ணிய நதியில் நீராடுவோர் பொன் முதலியவற்றால் செய்வித்த மீன் முதலியவற்றை அதில் செல்லவிடுதல் (16), பொன்னாற்செய்த நண்டு இறவு வாளைகளை ஆற்றில் விடுதல் (10), மகளிர் தேரை மகளிர் ஓட்டுதல் (11), மகளிர் பிடியை ஊர்தல் (10), பரத்தையர் மாவும் பிடியும் ஊர்தல்(10).
8, பெருங்கதையில் காணப்படும் செய்திகள்:
     பசு வழிபாடு (1-34-16), பிரச்சோதனனுக்குத்தேவியர் பதினாறாயிரவர்(1-34-77), சீதேவி யென்னும் தலைக்கோலம் (1-34-121), பொன்னாலாகிய சிறுபாத்திரம் (1-34-160). தலைக்கோற் பெண்டிர் (1-35-72), பாலாவி போன்ற நுண்ணிய ஆடை (1-36-64), விபூதி (1-36-225), பொற்பூண் கட்டிய பிரம்பு (1-37-9), பேய்பிடித்தாடுவோரின் பின் பறைகொட்டிச் செல்லல் (1-37-246) கடிகையாரம் (1-38-123), பொறியொற்று (முத்திரை)(1-38-286), மான்கண் போன்ற சாளரம் (1-40-9), எட்டிப்பட்டம் பெற்ற அரசகுமரன் (1-40-116), கொடிவடிவ மெழுதின